வலை எழுத்து

புதிய புத்தகங்கள்

இந்த ஆண்டு மூன்று புதிய புத்தகங்கள் வெளியாகியிருக்கின்றன. ஒன்று, உக்ரையீனா. மெட்ராஸ் பேப்பர் வார இதழில் வெளிவந்த உக்ரைனின் அரசியல் வரலாற்றுத் தொடர். அடுத்தது, தொடு வர்மம். குறுங்கட்டுரைகளின் தொகுப்பு. மூன்றாவது, வீட்டோடு மாப்பிள்ளை. உயிர்மை மாத இதழில் எழுதிய நகைச்சுவைப் புனைவு. உண்மையில், இந்த ஆண்டு நான் வைத்திருந்த திட்டங்கள் வேறு. மெட்ராஸ் பேப்பர் ஆரம்பித்ததில் இருந்து அனைத்துத் திட்டங்களையும்...

மெட்ராஸ் பேப்பர்

தொலைக்காட்சிக்கு எழுதுவதை நிறுத்தி எட்டு மாதங்கள் ஆகின்றன. இந்நாள்களில் நான் என்ன செய்கிறேன் என்று கேட்காத நண்பர்களே கிடையாது. எதையாவது செய்துகொண்டிருப்பேன் என்ற நம்பிக்கை மட்டும் எல்லோருக்கும் இருந்தது. அனைவருக்கும் சொல்வதற்கு ஒரு பதில் இருந்தாலும் அது உருத் திரண்டு ஒரு வடிவம் கொண்டு வெளிப்பட இவ்வளவு கால அவகாசம் தேவைப்பட்டது. நண்பர்களே, உங்கள் வாழ்த்தோடு ஒரு புதிய பத்திரிகை தொடங்குகிறேன்...

பதினான்கு சொற்கள் (சிறுகதை)

அந்தப் பெண்ணை முதல் முதலில் பார்த்தபோது பள்ளி இறுதி வகுப்பில் படிக்கிறவளாக இருப்பாள் என்று நினைத்தேன். ஆனால் இருபத்தைந்து வயது என்று சொன்னாள். அலுவலகத்தில் சில சிறிய, செப்பனிடும் பணிகளைச் செய்ய வேண்டியிருந்தது. எளிய அலங்காரங்கள் கொஞ்சம். நண்பர் ஒருவர் அந்தப் பெண்ணின் எண்ணைக் கொடுத்துப் பேசச் சொன்னார். பகுதி நேரமாகத்தான் செய்வாள்; ஆனால், வேலை ஒழுங்காக இருக்கும் என்றார். அவள் நேரில் வந்தபோது...

சில காதல்களின் கதை

அந்தப் பெண்ணுக்கு என்று ஆரம்பிப்பது அபத்தம். அந்தச் சிறுமிக்கு மிஞ்சிப் போனால் பதிமூன்று வயது. எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். வீடு, வீட்டை விட்டால் பள்ளிக் கூடம், மீண்டும் மாலை வீடு. ஓய்வுக்கு இணையம். ஒப்புக்குத் தோழிகள். எல்லா சராசரி எட்டாம் வகுப்பு மாணவிகளையும் போலத்தான் அவளும் இருந்தாள். அல்லது அப்படி எல்லோரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு நாள் பள்ளிக்கூடத்தில்...

அருள் கூடிப் பொங்கிப் பொழிதல்

அவரை நினைக்கும்தோறும் அப்பா என்றுதான் மனத்துக்குள் அழைப்பேன். ஏன் என்று தெரியாது. தோற்றத்தில் என் அப்பா அவரைப் போன்றவரில்லை. வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. என் அப்பாவுக்கு சேஷாத்ரி சுவாமிகளைப் பற்றித் தெரிந்திருந்ததா என்றுகூட எனக்குத் தெரியாது. ஆனாலும் அவர் எனக்கு அப்பா உறவுதான். இத்தனை வருடங்களுக்குப் பிறகு இதனை எழுத அமரும்போது காரணம் யோசித்துப் பார்க்கிறேன். என் அப்பாவைப் போல என் சிறுமைகளைச்...

ஒரு சிறிய சமூகத்தின் புனைபெயர்

தமிழ்ச் சூழலில் ஒரு சராசரி மனிதன் அறுபதாண்டுகள் நலமாக வாழ்வதற்கும் ஓர் எழுத்தாளன் வாழ்வதற்கும் வித்தியாசங்கள் உண்டு. அவன் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தாலொழிய அந்தக் காலப் பரப்பைப் பெரிய சிக்கல்களின்றிக் கடப்பது சிரமம். ஜெயமோகன், சிக்கலின்றிக் கடந்தார் என்று சொல்ல முடியாது. அவருக்குப் பத்தாண்டுகள் சிறியவன் என்ற அளவிலேயே, அவர் மீது திணிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், அக்கப்போர்கள், திரிபுகள், காழ்ப்புகள்...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds