வலை எழுத்து

கணை ஏவு காலம்: இரண்டு மாத வாழ்க்கை

அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் – இஸ்ரேல் போர் தொடங்கியது. பத்தாம் தேதி முதல் இந்து தமிழ் திசையில் கணை ஏவு காலம் எழுதத் தொடங்கினேன். ஆரம்பிப்பதற்கு முன்னரே இது போரைக் குறித்த கட்டுரைகளல்ல என்று தெளிவாகச் சொல்லிவிட்டுத்தான் ஆரம்பித்தேன். இறைத்தூதர் மோசஸ் காலத்துக் கதைகளில் தொடங்கி யாசிர் அர்ஃபாத்தின் மறைவுக் காலம் வரை நீண்டு நிறைந்த நிலமெல்லாம் ரத்தத்தின் இரண்டாவது பாகத்தைத்தான் இப்போது...

ஒரு நபர் கமிஷன்

ஒரு முழு நேர எழுத்தாளனாக இருப்பதில் எழுத்து-வருமானத்துக்கு அப்பால் வேறு சில அசௌகரியங்கள் இருக்கின்றன. நானாக யாரிடமும் சென்று எப்போதும் பேசுவதில்லை என்றாலும் வம்படியாக வந்து பேசுவோருக்கு பதில் சொல்ல வேண்டியதாகிவிடுகிறது. கடந்த வாரம் ஒரு நாள் காலை நடைப் பயிற்சியின்போது (அன்றைக்குப் பார்த்து எட்டரைக்கு நடக்கச் சென்றேன்.) ஒருவர் வேகவேகமாக அருகே வந்து வணக்கம் சொன்னார். ‘சார், அன்னிக்கு ஒரு நாள் ஆபீஸ்...

அறுக்க மாட்டாதவன் – ஒரு கடிதம்

நம்மூரில் பணிச்சூழலியல் (ergonomics) என்றால் என்னவென்றே தெரியாது. தினம் பயன்படுத்தும் செருப்பில் மிச்சப்படுத்தி, என்றாவது ஒரே நாள் போடும் ஷூவுக்கு செலவு செய்து, கால்வலி வந்து பிஸியோதெரபிக்கு பல ஆயிரம் அழுவோம். இப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் நம் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் விஷயங்களை நாம் கவனிக்க வேண்டியதன் அவசியத்தை இவ்வளவு எளிதாக, அதே சமயம் வெளிப்படையாக யாரும் இது வரை எழுதியதில்லை. பா.ரா.வால்...

நிலமெல்லாம் ரத்தம் – கார்ல் மார்க்ஸ் கணபதி

பா. ராகவன் எழுதியிருக்கும் “நிலமெல்லாம் ரத்தம்” எனும் நூல், இஸ்ரேல் பாலஸ்தீன் விவகாரம் குறித்து தமிழில் வந்திருக்கும் மிக முக்கியமான நூல். இப்போது உச்சத்துக்கு வந்திருக்கும் இஸ்ரேல் – பாலஸ்தீனிய விவகாரம் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்காக படிக்கையில் இந்நூல் ஜெயமோகன் தளத்தின் வழியாக என் கவனத்துக்கு வந்தது. பா. ராகவனின் மொழி நடை குறித்து சொல்ல வேண்டியதில்லை. எல்லா வாசகர்களுக்குமான...

அறுக்கமாட்டாதவன்

எழுதத் தொடங்கிய காலத்தில் பெரும்பாலும் நானொரு கைவலிய நவநீதனாகத்தான் இருப்பேன். என் அளவுக்கே குண்டான பேனாக்களைப் பிடிக்க முடியாமல் பிடித்துக்கொண்டு நான்கைந்து மணி நேரம் இடத்தை விட்டு நகராமல் அமர்ந்து எழுதிக்கொண்டிருப்பேன். வலி, விரல்களில் இருந்து முழங்கை வரை நீண்டு தொடும்போது சிறிது நேரம் ஓய்வு. பிறகு மீண்டும் எழுத ஆரம்பித்தால் தோள்பட்டை வலிக்கும்வரை எழுதுவேன். கைவலி உச்சம் தொடும்போது அது கழுத்து...

நான் யார்? – சுந்தர ராமசாமி ஆவணப்படம்

தேவநேயப் பாவாணர் நூலக வளாகத்தில் நடந்துகொண்டிருக்கும் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் ஆவணப் பட விழாவுக்கு நேற்று சென்றிருந்தேன். ரவி சுப்ரமணியம் இயக்கத்தில் இந்திரா பார்த்தசாரதியின் நாடகத் துறை பங்களிப்புகள் குறித்து ஒரு சிறிய டாக்குமெண்டரி, ஆர்.வி. ரமணியின் இயக்கத்தில் ‘நான் யார்?’ என்கிற சுந்தர ராமசாமியைப் பற்றிய முழுநீள (இரண்டு மணி நேரம்) டாக்குமெண்டரி இரண்டையும் பார்த்தேன். நண்பர் மனுஷ்யபுத்திரன்...

என். சங்கரய்யா: அஞ்சலி

கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் என். சங்கரய்யா காலமானார். ஆழ்ந்த இரங்கல்கள். சங்கரய்யா எவ்வளவு பெரிய ஆளுமை என்று தெரியாத வயதில் அவர் வசிக்கும் வீதியில், அவர் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளிக் குடிபோனோம். குரோம்பேட்டை அன்றைக்கு அவ்வளவாக வளர்ந்திருக்கவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக வீடுகள் இருக்கும். எங்கெங்கும் சீமைக் கருவேல புதர்களும் புதர் இடுக்குப் பன்றிகளும் இருக்கும். வீதியில் பெரிய நடமாட்டம்...

பார்த்தால் தீருமா பசி?

எனக்கு சமைக்கத்தான் வராதே தவிர, சாப்பிடும் கலையில் சந்தேகமின்றி வாகை சூடியவன். குவாலிடி கண்ட்ரோல் என்றொரு பணி இனத்தையே எவனோ என்னை ஒளிந்திருந்து பார்த்துத்தான் உருவாக்கியிருக்கிறான் என்ற ஐயம் எனக்குண்டு. சாதாரண சாம்பார், ரசமானாலும் ருசியில் அரை சிட்டிகை முன்னப்பின்ன இருந்தால் அந்தராத்மா அலாரம் அடித்துவிடும். இது வெறும் உப்பு-காரம் குறைபாடு சார்ந்தது மட்டுமல்ல. ஒரு ரசப்பாத்திரத்தைத் திறந்தால்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி