ஒருவர் பிரபலமாக இருந்தால் அவரை விளம்பரப் படங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வார்கள். இக்காலத்தில் பெரும்பாலும் திரைப்படத் துறையினர். அல்லது கிரிக்கெட் வீரர்கள். வேறு துறைப் பிரபலங்கள் வருவதை அபூர்வமாகவே பார்க்கிறோம். ஆனால் யோக்கியமாக ஒப்பந்தம் செய்து, உரிய தொகை கொடுத்தே விளம்பரங்களில் நடிக்கச் சொல்கிறார்கள். அத்துமீறல்கள் இதில் இப்போது இருக்கின்றனவா என்று தெரியவில்லை.
இது வேறு அது வேறு
ஒரு விடுதலை இயக்கத்துக்கும் தீவிரவாத இயக்கத்துக்கும் என்ன வேறுபாடு? மேலோட்டமான பார்வையில் இரண்டும் ஒரே மாதிரியான தோற்றத்தையே கொண்டிருக்கும். சப்பாத்தியும் புல்காவும் போல. ஊத்தப்பமும் செட் தோசையும் போல. ஆனால் இரண்டும் ஒன்றல்ல. கண்ணுக்குத் தெரியாத தொலைவில் ஒரு லட்சியம். அதை அடைவதற்கு ஆயுத வழியே சரி என்கிற தீர்மானம். அந்தத் தீர்மானத்துக்கு வந்து சேர்ந்ததன் பின்னணியில் ஒரு ரத்த சரித்திரம். அரசுகள்...


