கடந்த சில நாள்களாகக் கவனித்திருப்பீர்கள். நாள்தோறும் அறிவிப்பில் தேவநேயப் பாவாணர் நூலக அரங்கைக் குறிப்பிடுகிறேன். அது மெட்ராஸ் பேப்பரின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்க விழா அறிவிப்புத் துளி. இன்றைக்கு வெளியிடத் தயார் செய்திருந்த அறிவிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு இதனை எழுதுகிறேன். ஓர் இணைய வார இதழ், நான்காண்டுகளை நிறைவு செய்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது இன்றைய தமிழ்ச் சூழலில் ஒரு மாய யதார்த்தம்...
கழுதை எப்படித் தேய்ந்து கட்டெறும்பாகும்?
உரியைத் தொடங்கும் முன்னர் கைவசம் பத்து அத்தியாயங்களையாவது தயாராக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அன்றன்று எழுதுவதும் அதைக் கெடுப்பதற்கென்றே வருகிற கெட்ட சக்திகள் மீதான அச்சமும் கொடுமையானவை. யதியையோ, சலத்தையோ ஒருநாள்கூட நான் நிம்மதியாக எழுதிய நினைவில்லை. எப்போதும் பதற்றமும் கவலையும் இருக்கும். இம்முறை அந்தப் பதற்றம் இருக்கக்கூடாது; கைவசம் சில அத்தியாயங்களாவது எப்போதும் இருக்கும்படிப்...
ஆண்டின் முதல் வகுப்பு
பாரா நடத்தும் ஆன்லைன் எழுத்துப் பயிற்சி வகுப்புகள் இந்த ஆண்டு பிப்ரவரி 14 அன்று ஆரம்பமாகின்றன. நுட்பம் அறிந்து எழுத விரும்புவோர் வரலாம்.
சித்தி 2 – விருது
சித்தி 2 நெடுந்தொடர் வசனப் பணிக்காகத் தமிழ்நாட்டு அரசின் சிறந்த வசனகர்த்தா விருது எனக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது. வாய்ப்பளித்த ராடன் – ராதிகா சரத்குமார் அவர்களுக்கும் விருதளிக்கும் அரசுக்கும் நன்றி. மிக நீண்ட இவ்விருதுப் பட்டியலில் வாணி ராணி இருக்கிறது. அதில் நான் இருந்தேன். கல்யாணப் பரிசு இருக்கிறது. அதில் நான் இருந்தேன். கண்மணி இருக்கிறது. அதில் நான் இருந்தேன். தொலைக்காட்சித்...
எழுத்துப் பயிற்சி வகுப்பு – நவம்பர் 1
எழுத்துத் துறையில் எந்த தேவதையும் யார் தலையிலும் கைவைத்து ஆசி வழங்கி, ஓரிரவில் காவியம் பாட வைக்காது. அடிப்படை ஆர்வமும் கற்கும் வேட்கையும் இடைவிடாத பயிற்சியும் இருந்தால் மட்டுமே சாத்தியம். முட்டி மோதி நான் பெற்றதைத்தான் வகுப்புகளில் என் மாணவர்களுக்குத் தருகிறேன். ஆர்வம் உள்ளவர்கள் வரலாம்.
பதினைந்து சதவீதம்
தீபாவளியை முன்னிட்டு ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அனைத்துப் புத்தகங்களுக்கும் பதினைந்து சதவீதம் சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமீபத்திய நாவல் மிருது, பலூசிஸ்தான் விடுதலைப் போராட்ட வரலாறு உள்ளிட்ட, அச்சில் உள்ள 81 புத்தகங்களையும் பார்வையிட்டு வாங்குவதற்குக் கீழே உள்ள சுட்டியைப் பயன்படுத்துக. ஜீரோ டிகிரியில் பாராவின் புத்தகங்கள் வாசக நண்பர்களுக்கு மனமார்ந்த தீப...
எழுதும்போது செய்யவே கூடாத தவறுகள் – வகுப்பு
மேற்கண்ட தலைப்பில் ஒருநாள் சிறப்பு வகுப்பு நாளை மறுநாள் ஞாயிறன்று (அக்டோபர் 12) நடக்கும் (zoom class). ஆர்வமுள்ளோர் நாளைக்குள் இணையலாம். பழைய மாணவர்கள், புதிய மாணவர்கள் அனைவருக்கும் இது பொது. என்னுடைய வழக்கமான வகுப்புகள் நிறைய கதைகளுடன் நடக்கும். வந்தவர்களுக்கு இது தெரியும். இந்த வகுப்பு சற்று வேறு மாதிரி இருக்கும். கூடா 40 என்று ரைமிங்காகத் தலைப்பு வந்துவிட்டதே தவிர, எழுதிப் பார்க்கும்போது...
வாழ்வில் இல்லாததும் எழுத்தில் உள்ளதும்
எழுத்தில் நகைச்சுவை கூடுவதென்பது வாழ்க்கையை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதைப் பொறுத்தது. எதையும் விலகி நின்று பார்க்கப் பழகிவிட்டால் நகைச்சுவை தன்னியல்பாக வந்துவிடும். அதாவது, எழுதுபவன் தனிப்பட்ட முறையில் உணர்ச்சிவசப்படவே கூடாது. சிலருக்கு இது இயல்பாக அமையும். பழக்கத்தின் மூலமும் கொண்டு வரலாம். தரபேதம் இருக்கும் ஆனாலும் முழுப் பழுதாகாது. நகைச்சுவையை முதல் முதலில் Non Fiction இல்தான் முயற்சி...
எதற்கு இந்தப் புத்தகம்?
நீ வேறு, நான் வேறு: பலூசிஸ்தான் விடுதலைப் போராட்ட வரலாறு பாலஸ்தீனத்து முஸ்லிம்கள் வேறு, இஸ்ரேலிய யூதர்கள் வேறு. அப்படித்தான் பலூசிஸ்தானில் வசிக்கும் பலூச்சிகள் வேறு, பாகிஸ்தானில் வசிக்கும் முஸ்லிம்கள் வேறு. 1948 ஆம் ஆண்டிலிருந்து பாலஸ்தீனத்து முஸ்லிம்களுக்குச் சிக்கல் தொடங்கியது. இன்றுவரை அது தொடர்கிறது. அதே ஆண்டுதான் பலூசிஸ்தான் மக்களுக்கும் பிரச்னை ஆரம்பித்தது. இன்னும் ஓயவில்லை. அங்கே நடக்கும்...
பலூசிஸ்தான் விடுதலைப் போராட்ட வரலாறு – புதிய புத்தகம்
1948 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கும் பலூசிஸ்தானின் விடுதலைப் போராட்ட வரலாறு மிக நீண்டது; தீவிரமும் தகிப்பும் கொண்டது. கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாகத் திட்டமிட்டு மறைக்கப்பட்டது. விரிவான ஆய்வுக்குப் பிறகு மெட்ராஸ் பேப்பர் வார இதழின் தினசரிப் பகுதியில் இதனைத் தொடராக எழுதினேன்.
மிருது – புதிய நாவல்
சலத்தின் உக்கிரம், ஆக்ரோஷம், தகிப்பு அனைத்திலிருந்தும் முற்றிலும் விலகி, தொட்ட இடமெல்லாம் வருடித்தரும் விதமாக இதனை எழுதினேன்.
மெட்ராஸ் பேப்பர் – சுதந்தர நாள் விழா
இன்று மாலை (ஆகஸ்ட் 15, 2025) ஆறு மணிக்கு மெட்ராஸ் பேப்பர் வார இதழ் நடத்தும் சுதந்தர நாள் விழாவுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன். நிகழ்ச்சி zoom வழி நடைபெறும். விவரங்கள் மேலே காணும் அழைப்பிதழில் உள்ளன. இணைவதற்கான லிங்க், கீழே.
வருக.
நிகழ்ச்சியில் இணைவதற்கான zoom link இங்கே உள்ளது. சரியாக மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும்.
வேட்டி
இகவாழ்வில் ஒவ்வொருவருக்கும் விடை தெரியாத வினாக்கள் ஆயிரம் இருக்கும். எனக்கு உள்ளவற்றுள் முதன்மையான வினா, வேட்டி எப்படி இடுப்பில் நிற்கிறது என்பது.
கருவி(யி)ன் குற்றம்
இது என்னைப் போலவே உருண்டையானது. அசப்பில் ஒரு உருளைக்கிழங்கு போண்டாவைக் காதில் சொருகியது போல இருக்கும். காது துவாரங்களுக்குள் சொருகி எப்படிச் சுழற்றினாலும் இரண்டடி நடந்தால் கீழே விழுந்துவிடும். சுழற்றாமல் அப்படியே சொருகப் பார்த்தால் பாடாது.
பராமரிப்புக் கலை
மேக் ஒழுக்கம் என்பது மென்பொருள்களை எங்கிருந்து தரவிறக்கம் செய்கிறோம் என்பதில் தொடங்குகிறது. ஆப் ஸ்டோரில் இருந்துதான் எதையும் வாங்குவது என்பது என் கொள்கை. இலவச மென்பொருள்களானாலும் சரி; காசு கொடுத்து வாங்குவதானாலும் சரி. அதிகாரபூர்வக் கடையில் மட்டும் வாங்கினால் ஆபத்து கிடையாது.
உதயம்: சில நினைவுகள்
பிரபஞ்சன், செம்பூர் ஜெயராஜ், ஜோ ஜார்ஜ், க.சீ. சிவகுமார், ம.வே. சிவகுமார், கல்கியில் அடிக்கடி எழுதும் இதர பல எழுத்தாளர்கள் - யாரும் மிச்சமில்லை. எனக்காகவே யாரோ கட்டிவைத்த திறந்த வெளி ஆபீஸ் போலத்தான் அந்தத் திரையரங்கப் படிக்கட்டுகளைப் பயன்படுத்தி வந்தேன்.
டிஜிட்டல் உலகில் தமிழ் வாசிப்பு
இந்த மாதிரி பத்திக்குப் பத்தி சப் டைட்டில் போட்டு, பொருட்சுருக்கம் எல்லாம் சொல்லி, கடைசியில் உசாத்துணை கொடுத்து வாழ்நாளில் நான் எழுதியதே இல்லை. இது கவர்மெண்ட் சமாசாரம். வேறு வழியில்லாமல் போய்விட்டது.
ஒரு நிரந்தர நம்பர் 2வின் மரணம்
1998 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஜவாஹிரி தமது இயக்கத்தை அல் காயிதாவுடன் இணைத்தார். அதே ஆண்டு ஆகஸ்டில் கென்யாவிலும் தான்சானியாவிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மீது அல் காயிதா நடத்திய தாக்குதல்களை அவர்தான் ஒசாமாவுடன் இணைந்து வடிவமைத்தார்.
நம்பாதே.
இங்கே எழுதுகிறேன். இது என் இடம். இன்னொருவன் கட்டுப்பாடு என்ற ஒன்றில்லை. சிறிய குறிப்புகள் ஏதாகிலுமென்றால் வாட்சப் சேனலில் எழுதுகிறேன். அதுவும் எதுவும் நிரந்தரமில்லை என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. நான் மட்டும் நிரந்தரமா!
ஒன்றென்றிருத்தல், கடிதம் – சிகரம் பாரதி
Multi Tasking பற்றிய பதிவைக் கண்டேன். அந்தக் கலையில் நான் பூச்சியம் என்கிறீர்கள். முற்று முழுதாக அப்படிச் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை.


