காசை எண்ணிக் கொடுத்துவிட்டு அரங்கத்தின் வாசலில் அவர் ஆட்டோவிலிருந்து இறங்கும்போது, மிதந்து கடந்த காரில் அமைச்சர் இருந்தார். காத்திருந்த கனவான்கள் பரபரப்படைந்து விரைந்து வந்தார்கள். காற்றில் படபடத்துச் சுருளப் பார்த்த பேனரில், நூற்றாண்டு விழாக் காணும் மேதை, நீல எழுத்துக்களில் பாதி தெரிந்தார்.
நகையலங்காரம்
எனது நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்பு, ‘நகையலங்காரம்’ என்ற பெயரில் இன்று கிண்டில் மின் நூலாக வெளியாகியிருக்கிறது. மொத்தம் 26 கட்டுரைகள்.
பத்திரிகைகளில் எழுதியவை, இணையத்தில் எழுதியவை, சொந்த இஷ்டத்துக்கு எழுதி எங்கும் பிரசுரிக்காதவை என்று இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவிதம். அனைத்துக்கும் பொதுவான ஒரே அம்சம், நகைச்சுவை.
கொனஷ்டை
ஃபேஸ்புக்கில் எனது இந்தக் குறிப்புக்கு நண்பர் ராஷித் அகமது எழுதிய கமெண்ட் கீழே உள்ளது. எழுதும்போது ஒருவரால் சிரித்தபடியோ, குறைந்தது புன்னகையுடனோ எழுத முடியுமா? அநேகமாக முடியாது என்றே நினைக்கிறேன். நான் எப்படி எழுதுகிறேன் என்று சொல்லுகிறேன். எழுதுவதையும் யோசிப்பதையும் நான் ஒன்றாகச் செய்வதில்லை. முழுதும் யோசித்து முடிக்காமல் எழுத அமரமாட்டேன். உட்கார்ந்துவிட்டால் நடுவே நிறுத்தி யோசிக்கிற வழக்கம்...
அடுத்தது…
எங்கள் தொலைக்காட்சி உலகில் ஒரு வழக்கமுண்டு. மதியம் சாப்பாடு ஆனதும் புரொடக்ஷன் ஆள் ஒருவர் சாப்பிட்ட அனைவருக்கும் ஒரு துண்டு கடலை பர்பி கொடுத்துக்கொண்டே போவார். இது அனைத்து யூனிட்டுகளிலும் நடக்கும். சினிமா உலகிலும் இவ்வழக்கம் இருக்கிறதென்று கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் கண்டதில்லை. உண்ட வாய்க்கு வெற்றிலை பாக்குக்கு பதில் வேர்க்கடலை பர்பி. அந்த இனிப்பு வாயெங்கும் பரவி, அடித்தொண்டையை நனைத்து உள்ளே...
நான்கு சந்துகளுக்கு அப்பால்
பொதுவாக நான் புத்தகங்களைப் பற்றி அதிகம் எழுதுவதில்லை. அறிமுகமாக நாலு வரி எழுதினால் அதிகம். அதற்குமேல் சொல்ல என்னிடம் எப்போதும் ஏதும் இருப்பதில்லை. காரணம், வாசிப்பது என்பது என் பிரத்தியேக சந்தோஷம். என் அனுபவம் மற்றவர்களுக்கும் நேரும் என்று சொல்லுவதற்கில்லை. ஆஹாவென மக்கள் வியந்து பாராட்டிய பல புத்தகங்களை நாலு பக்கம் கூட வாசிக்க முடியாமல் கடாசியிருக்கிறேன். அதேபோல, எனக்கு மிகவும் பிடித்த பலவற்றை...
லா.ச.ரா : அணுவுக்குள் அணு
லாசரா எனக்கு முதல் முதலில் அறிமுகமானபோது நான் விவேக் ரூபலாவின் கொலைவெறி ரசிகனாக இருந்தேன். பத்தாம் வகுப்பு முடித்திருந்த நேரம். எங்கள் பேட்டையில் அப்போது இருந்த லீலா லெண்டிங் லைப்ரரியில் தினமும் ஒரு கிரைம் நாவலை எடுத்துப் படிப்பது என்பதை ஒரு சமூகக் கடமையாக நினைத்தேன். சுஜாதாவெல்லாம் என்னைக் கவரவில்லை. ராஜேஷ்குமார்தான். உலகின் ஒரே உன்னத எழுத்து என்றால் அது அவரது க்ரைம் நாவல்தான். அத்தகு ரத்த தினம்...
பேட்டா
இன்றைக்கு எப்படியும் கொடுத்துவிடுவார்கள் என்று தணிகாசலம் சொல்லியிருந்தான். எத்தனை நாள் பேட்டா என்று உடனே கேட்கத் தோன்றியதைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு, ரொம்ப நன்றி சார் என்று மட்டும் சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியே வந்தான் சுப்பிரமணி. மனித மனம்தான் எத்தனை விசித்திரங்கள் நிறைந்தது! மூன்றாண்டு காலமாக வேலையே இல்லை. வீட்டில் சும்மா படுத்துக் கிடந்ததில் நாடி நரம்புகளெல்லாம் உலர்த்தாமல் சுருட்டிப்...
சிங்கிள் டீ
ராயப்பேட்டை ஒய்யெம்சியே மைதானத்தில் நடைபெறும் புத்தகக் காட்சிக்கு இரண்டு நாள் சென்றேன். முதல் நாள் சுமார் ஒரு மணிநேரம். இரண்டாம் முறை சென்றபோது சுமார் மூன்று மணி நேரம்.
இறுதிச் சடங்கு – விவாதங்கள்
இறுதிச் சடங்கு சிறுகதை சில விவாதங்களைக் கிளப்பியிருப்பதை அறிந்தேன். சிறுகதைகளைப் பொருட்படுத்தி விவாதிப்போர் இன்னும் இருப்பதே ஆசுவாசமளிக்கிறது. நண்பர் ஆர்வி இந்தக் குறிப்பை அனுப்பியிருந்தார்.நண்பர்களின் கருத்துகளோடு உடன்படவோ முரண்படவோ நான் விரும்பவில்லை. நான் சொல்ல நினைத்தது இதனைத்தான் என்று மைக் பிடிப்பதைக் காட்டிலும் அவலம் வேறில்லை. வாசகர்களுக்கு ஒரே ஒரு குறிப்பை மட்டும் நான் தரலாம். இந்தக்...
இறுதிச் சடங்கு
சரி நாம் திருமணம் செய்துகொள்ளலாம். அவ்வளவுதானே? திருப்தியா? சந்தோஷமா?
யெஸ். தேங்ஸ். ஆனால் ஊரறிய. எனக்கு பேப்பரில் போட்டோ வரவேண்டுமென்ற ஆசையெல்லாம் இல்லை. ஆனால் குறைந்தபட்சம் நம் நண்பர்களுக்குத் தெரியவேண்டும். பெற்றோருக்குத் தெரியவேண்டும். உறவினர்களுக்கு அப்புறம்.
அவன், அவனை ஒரு கணம் உற்றுப் பார்த்தான். புன்னகை போல் ஒன்று வந்த மாதிரி இருந்தது. ஆனால் முழுதாக இல்லை. ஆல்ரைட். சொல்லிவிடுவோம்.
யாளி முட்டை
இதுவரை சுமார் 100 சிறுகதைகள் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன். தொகுப்பாக வந்தவை போக மிச்சமுள்ளவற்றில் என்வசம் இருப்பவை இவ்வளவுதான். குமுதத்தில் சில நல்ல கதைகளை எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றுக்கெல்லாம் பிரதி இல்லை. ஆரம்பக் காலத்தில் பிரசுரமாகும் அனைத்தையும் கத்தரித்து வைத்து பைண்ட் செய்து அழகு பார்க்கும் வழக்கமெல்லாம் இருந்தது. போகப் போக அதெல்லாம் தன்னால் நின்றுவிட்டது. பிறகு கையெழுத்துப்...
நக்கிப் பார்த்த கதை
நான் சாப்பிட்டுக்கொண்டிருந்த மேசையின் எதிர் இரு நாற்காலிகளுக்கு அந்த ஜோடி வந்து அமர்ந்தது. சர்வரானவன் பணிவுடன் நெருங்கி என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டான். (நான் தமிழர் உணவான தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.) ஜோடியில் ஆணாக இருந்தவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, ‘நீ இரு மஹேஷ், நான் சொல்றேன்’ என்று அவனைத் தடுத்துவிட்டு பெண்ணாக இருந்தவள் சொல்லத் தொடங்கினாள். பனீர் புலாவ் ஒரு ப்ளேட். ஜீரா ரைஸ்...
தொகுப்புக்கு உதவி தேவை
ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சியில் என்னுடைய சிறுகதைகளின் தொகுப்பொன்றைக் கொண்டுவரலாம் என்று நினைத்தேன். நான் சிறுகதை எழுதி நாளாகிவிட்டது. ஆனால் இப்போதும் அவ்வப்போது யாராவது பழைய கதைகளைக் குறிப்பிட்டோ, புத்தகம் கேட்டோ எழுதுகிறார்கள். இன்று ஒளிப்பாம்புகள் எங்கே கிடைக்கும் என்று ஒரு நண்பர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார்.
பானைக்குள் பூதம்
ஒரு கதை எழுதியிருக்கிறேன் என்று என் மகள் (வயது 7) ஒரு தாளை நீட்டினாள். ஏற்கெனவே சொல்லப்பட்ட கதைதான். ஆயினும் மொழி அவளுடையது.
கீழே அவள் எழுதிய வர்ஷன். வாக்கிய அமைப்பு, ஒற்றுகள் எதையும் மாற்றவில்லை. டைப் செய்தது மட்டுமே என் பணி.
எழுபத்திரண்டு சீன், முற்றும்.
கடந்த நாலு தினங்களாக நான் ஊரில் இல்லை. திடீரென்று கிளம்ப நேர்ந்ததால் யாரிடமும் சொல்லிக்கொள்ள அவகாசம் இல்லை. போன இடத்தில் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்ய நேர்ந்ததால் யாருடனும் பேசவும் இல்லை. இது ஒரு பெரிய விஷயமா என்று வியக்குமளவு, வந்து மெயில் பார்த்தபோது ஏராளமான விசாரிப்புகள். ஊரில் இல்லையா, உடம்பு சரியில்லையா, வேறு பிரச்னையா – இன்னபிற. அனந்த பத்மநாபனிடம் பணம்தான் இருக்கிறது. எனக்கு எத்தனை நல்ல...
மூன்று வருடங்கள்
இன்று காலை உலவியைத் திறந்தவுடன் ட்விட்டரில் ஒரு செய்தி வந்திருந்தது. நான் அங்கு எழுதத் தொடங்கி இன்றோடு மூன்று வருடங்கள் நிறைகின்றன என்பதே அது. மகிழ ஒன்றுமில்லை என்றாலும் கிட்டத்தட்ட தினசரி நான் பயன்படுத்தியிருக்கிறேன். செய்திகள், தகவல்கள், வெண்பாம்கள், சிந்தனைகள், நகைச்சுவை, உரையாடல், விவாதம், விதண்டாவாதம், இலக்கியம், சினிமா, வெட்டிப்பேச்சு அனைத்துக்கும் அந்த இடம் எனக்கு சௌகரியமாக இருந்து...
நீலக்காகம் 3
விறகுத் தொட்டிக்காரர், வீட்டை விட்டுக் கிளம்பும்போது காகம் கரைந்தது. ஒரு கணம் நின்றார். திரும்பி உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார். ‘இவளே, உன் தம்பி வாராப்புல இருக்கு. ஆழாக்கு அரிசி கூடப் போட்டு சமைச்சிரு’ விசாலாட்சி திரும்பிப் பார்த்துப் புன்னகை செய்தாள். காகம் கரையும்போதெல்லாம் தம்பி வருவது வழக்கமாகியிருக்கிறது. இன்று நேற்றல்ல. திருமணமான நாளிலிருந்து இது நடக்கிறது. தற்செயலா, திட்டமிடப்பட்டதா...
நீலக்காகம் 2
அவர் சோளிங்கரிலிருந்து வருவதாகச் சொன்னார். சாமி, மாடியில் இருக்கிறது என்று சீடன் கை காட்டினான். காட்டிய கரத்தில் ஒரு வெள்ளைத் துணி சுற்றியிருந்தது. இன்னொரு கையில் குழவிக் கல் மாதிரி ஒன்று வைத்திருந்தான். அதன் முனையில் மிளகாய்ப் பொடி இடித்த நிறத்தில் என்னவோ ஒட்டிக்கொண்டிருந்தது. முதல் கட்டுக் கதவு பாதி திறந்திருக்க, மூன்று பேர் உள்ளிருந்து எட்டிப் பார்த்தார்கள். வந்தவர் அவர்களைப் பாதி பார்த்தபடி...
நீலக்காகம் 1
ஒரு கொலை செய்யவேண்டும் என்று உத்தரவாகியிருந்தது. செல்லியம்மன் கோயில் பூசாரி சாமியாடி முடித்து, கற்பூரம் காட்டி, கன்னத்தில் போட்டுக்கொண்டு கூட்டம் கலைந்த பிற்பாடு ரங்கநாத ஆச்சாரி கங்காதரன் தோளைத் தட்டி சட்டைப் பைக்குள் துண்டுச் சீட்டை வைத்தார். ‘என்னாது?’ என்று சைகை காட்டியபடியே கேட்டான் கங்காதரன். ‘தெரியல. லெட்ரு. சாமி குடுக்க சொல்லிச்சி’ என்று சொல்லிவிட்டு குங்குமம் பட்டிருந்த பாதி தேங்காய்...
போட்டு சாத்துங்கள் பொன்னியின் செல்வனை!
மாநிலம் ஒரு பொதுத்தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறது. ஆளும் கட்சிக்கு அத்தனை நல்ல பெயர் இல்லை. எதிர்க்கட்சியை இம்முறை திரும்ப நம்புவதற்கான நியாயமான காரணங்களும் ஏதுமில்லை. கூட்டணிக் காய்கள் தீவிரமாக நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கில் பணம் பரிமாறப்படுவதாகவும் பறிமுதல் செய்யப்படுவதாகவும் தினமொரு செய்தி வந்துகொண்டிருக்கிறது. எண்ணி ஒரே மாதம். இவரா அவரா ஆட்டத்தின் இறுதிக்கட்டம்...


