வணக்கம். மெட்ராஸ் பேப்பர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைகின்றன. எதிர்வரும் ஜூன் முதல் தேதி ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். ஓர் இணைய வார இதழ் இன்றைய சூழலில் நான்காண்டுகளை இடையூறின்றிக் கடப்பது சாதாரண விஷயமல்ல. இதனைச் சாத்தியமாக்கிய உங்களுக்கு முதலில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். மெட்ராஸ் பேப்பரின் ஐந்தாமாண்டுப் பயணத்தை ஒரு சிறிய விழாவாகக் கொண்டாட முடிவு செய்துள்ளோம்...
அங்கே இனி அவரில்லை
கடந்த சில நாள்களாகக் கவனித்திருப்பீர்கள். நாள்தோறும் அறிவிப்பில் தேவநேயப் பாவாணர் நூலக அரங்கைக் குறிப்பிடுகிறேன். அது மெட்ராஸ் பேப்பரின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்க விழா அறிவிப்புத் துளி. இன்றைக்கு வெளியிடத் தயார் செய்திருந்த அறிவிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு இதனை எழுதுகிறேன். ஓர் இணைய வார இதழ், நான்காண்டுகளை நிறைவு செய்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது இன்றைய தமிழ்ச் சூழலில் ஒரு மாய யதார்த்தம்...


