இன்று மாலை ஆறு மணிக்கு மெட்ராஸ் பேப்பர் ஆண்டு விழா கூகுள் மீட் வழி நடைபெற உள்ளது. பத்திரிகையாளர் சந்திரமௌலி விழாவுக்குத் தலைமை ஏற்கிறார். பத்திரிகையாளர் ரமேஷ் வைத்யா வாழ்த்துரை வழங்குகிறார். வேறு யாரும் பேசப் போவதில்லை. இந்நிகழ்ச்சி முற்று முழுதாக வாசகர் விழாவாக நடைபெற வேண்டுமென்பது எங்கள் விருப்பம்.
மெட்ராஸ் பேப்பர் வாசகர் திருவிழா
முதலில் எனக்குத் திருமணம் நடந்தது. பிறகு முதல் புத்தகம் வெளிவந்தது. அப்போதெல்லாம் நான் பகுதி நேரம் நல்லவனாகவும் இருந்ததால் போனால் போகிறதென்று என் மனைவி மெனக்கெட்டு ‘மூவர்’ தொகுதிக்கு ஒரு வெளியீட்டு விழா ஏற்பாடு செய்தாள். அக்காலத் தமிழ்ச் சூழலில் என்னைத் தவிர வேறு எவனுக்கும் விழா நடந்த மாலையிலேயே செய்தித் தாளில் புகைப்படத்துடன் செய்தி வந்திருக்க வாய்ப்பில்லை. போதாக் குறைக்கு மறுநாள் காலை...


