ஊழல்

கனிமொழியைத் தூற்றாதீர்கள்!

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச் சதியாளராக சுட்டிக்காட்டப்பட்டு, கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இருவார கால நீதிமன்ற விசாரணைக்காக அவர் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். இதுநாள்வரை வேறு எந்தக் கைது நடவடிக்கைக்கும் இல்லாத அளவு, இந்தச் செய்தி வெளியானது முதல் இணையத்திலும் வெளியிலும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தையும் ஆவேசத்தையும் ஒருங்கே பார்க்கிறேன். தமிழகப் பொதுத் தேர்தல் முடிவுகள் அப்படியே தலைகீழாகியிருந்தால் இன்று இச்சம்பவம் நடைபெற்றிருக்குமா என்று தொலைபேசியில் இது குறித்து உரையாடிய நண்பர்கள் சிலர் கேட்டார்கள். தெய்வமும் இப்போதெல்லாம் உடனுக்குடன் கணக்குகளை பைசல் செய்துவிடுகிறது என்று ஒருவர் சொன்னார். சென்ற வெள்ளிக்கிழமை தேர்தல் முடிவுகள் வந்தன, இந்த வெள்ளிக்கிழமை இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது, அடுத்த வெள்ளிக்கிழமை வேறு ஏதாவது அவசியம் நடக்கும் பாருங்கள் என்று இன்னொரு நண்பர் கலைஞரின் புதிய வெள்ளிக்கிழமை ராசி குறித்து அறிவித்தார். அவரே. பிப்ரவரி 17ம் தேதி முதல் ஆ. ராசா திகார் சிறையில் இருக்கிறார், கலைஞர் எப்படி அம்போவென்று அவரைக் கழற்றிவிட்டுவிட்டார் பாருங்கள்! அந்தப் பாவத்துக்கு இது சரியான தண்டனை என்றும் சொன்னார்.Read More »கனிமொழியைத் தூற்றாதீர்கள்!