Categoryபுத்தகக் கண்காட்சி

ஓர் அறிவிப்பு

நண்பர்களுக்கு வணக்கம். சென்னை புத்தகக் கண்காட்சி குறித்த பதிவுகள் அடுத்து வரும் தினங்களில் இங்கு அதிகம் இடம்பெறும். அநேகமாக அவை மட்டுமேகூட இடம்பெறலாம். பதிவாக வெளியிட வேண்டிய அளவு அவசியமற்ற சுருக்கமான தகவல்களை ட்விட்டரில் அப்டேட் செய்ய உத்தேசித்திருக்கிறேன். அதுவும் உடனுக்குடன் இந்தத் தளத்திலேயே வாசிக்கக் கிடைக்கும்படி செய்திருக்கிறேன். இந்தக் காரணங்களால்…

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 – வரைபடம்

சேத்துப்பட்டு அல்லது அமைந்தகரை என்று இரண்டு பெயர்களையும் சொல்கிறார்கள். பச்சையப்பா கல்லூரிக்கு எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் [பூந்தமல்லி நெடுஞ்சாலை.] நடைபெறவிருக்கிற சென்னை புத்தகக் கண்காட்சி 2009ன் அரங்க வரைபடத்தினைக் கீழே தந்திருக்கிறேன். படத்தில் கிழக்கு, நலம், வரம், பிராடிஜி, ஒலிப்புத்தகங்கள், கிழக்கு இலக்கிய நூல்கள் இருக்கப்போகிற அரங்குகளை மட்டும் தனியே...

Top 100 புத்தகங்கள்

புத்தகக் கண்காட்சியில் இந்த வருடம் என்னென்ன முக்கியம் என்று நண்பர்கள் சிலர் மின்னஞ்சலில் கேட்டார்கள். உண்மையில் எனக்கு இன்னும் முழு விவரம் தெரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவரும் சில வெளியீட்டு அழைப்பிதழ்கள், புத்தக மதிப்புரைகளின்மூலம் ஒன்றிரண்டு நூல்களைத்தான் குறித்து வைத்திருக்கிறேன். ஒன்றிரண்டு தினங்களில், புதிதாக வருகிற நூல்களுள் எனக்கு முக்கியமாகப் படுபவை குறித்து எழுதுகிறேன்.

சென்னை புத்தகக் கண்காட்சி – சில விவரங்கள்

நாளை மறுநாள் வியாழக்கிழமை சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. சில விவரங்கள்:
* அப்துல் கலாம், கண்காட்சியைத் தொடங்கிவைக்கிறார்.
* இடம், வழக்கமான பூந்தமல்லி நெடுஞ்சாலை, செயிண்ட் ஜார்ஜ் பள்ளி மைதானம்.
* மொத்த ஸ்டால்கள் 600. பரப்பளவு ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் சதுர அடி.
* வருபவர்களுக்குத் தேவையான உணவு, பானங்கள் வசதிக்காக 5000 சதுர அடியில் தனி வளாகம்.

சில வினாக்கள், சில புத்தகங்கள், சில எண்ணங்கள்

1. புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்திக்கலாமா? கிழக்கு அரங்கில் எப்போதும் இருப்பீர்களா? 2. இந்தக் கண்காட்சியில் வாங்குவதற்கென நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் எவை? 3. பிளாட்பாரக் கடைகளில் புத்தகம் தேடி வாங்கியதுண்டா? 4. கண்காட்சியில் கூடுதல் டிஸ்கவுண்ட் கிடைக்க வழியுண்டா? 5. கண்காட்சி குறித்து தினமும் எழுதுவீர்களா? 6. புத்தகக் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை...

மொட்டைமாடியில் கிடைத்த ஒரு பழைய கோயிஞ்சாமி

மொட்டை மாடியில் புத்தக அறிமுகம், வெளியீடு, ஏற்புரை, கலந்துரையாடல். கொஞ்ச நாளாயிற்று இதெல்லாம் பார்த்து. அதனால் கிழக்கு பதிப்பக அலுவலகத்திற்கு ஒரு விசிட். முதலில் நியூஸ் ரீல். மாலன் கட்டுரைத் தொகுப்பு ‘என் ஜன்னலுக்கு வெளியே’, பத்திரிகையாளர் ஜென்ராம் வெளியிட, சிங்கப்பூர் ஒலி எஃப். எம். பொன். மகாலிங்கம் பெற்றுக்கொள்ள, ஜென்ராம் புத்தகம் பற்றிப் பேச, பத்ரி சில கருத்துக்கள் சொல்ல, மாலன் ஏற்புரை வழங்க...

என் ஜன்னலுக்கு வெளியே – வெளியீடு

05.01.2009 – திங்கள் [அதாவது நாளை] மாலை 6 மணிக்கு மாலனின் ‘என் ஜன்னலுக்கு வெளியே’ கட்டுரைத் தொகுப்பினை வெளியிடுகிறோம். நாங்கள் சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட மாலனின் ‘சொல்லாத சொல்’ கட்டுரைத் தொகுப்பின் தொடர்ச்சியாக இந்நூலைக் கொள்ளலாம். தமிழ் முரசு, புதிய பார்வை, உயிர்மை, தினமணி, இந்தியா டுடே ஆகிய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் இவை. பெரும்பாலும் அரசியல், சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த...

திருவிழாவுக்குத் தயாராகுங்கள்!

ஒரு காலத்தில் நூறு. பிறகு ஐம்பது சேர்ந்தது. மேலும்கூடி இருநூறானபோது செய்தியில் வந்தது. பிறகு ஸ்கோர் என்னவென்று கேட்காத குறை. இந்த வருடப் பட்டியல் இங்கே இருக்கிறது. பிரம்மாண்டத் தமிழ்ப் படங்களின் பாடல் காட்சிகளில் பின்னணியில் குதிப்போர் வரிசை போல் இவ்வருட புத்தகக் கண்காட்சி வரிசை அமையவிருக்கிறது. சந்தேகமில்லாமல் திருவிழா. கால்வலி நிச்சயம். எத்தனை சுற்றினாலும் ஏதேனுமொரு வரிசையைத் தவற விட்டதுபோல...

இன்றுடன் இனிதே…

கிழக்கு மொட்டை மாடி புத்தக வெளியீடுகளின் இறுதிநாள் நிகழ்ச்சி இன்று நடந்தேறியது. சோம. வள்ளியப்பனின் ‘வாங்க பழகலாம்’ என்கிற இண்டர் பர்சனல் ரிலேஷன்ஷிப் குறித்த புத்தகமும் பாலு சத்யாவின் ஜார்ஜ் வாஷிங்டன் வாழ்க்கை வரலாறும் வெளியிடப்பட்டன. எஸ்.எல்.வி. மூர்த்தி, ஆர். வெங்கடேஷ் இருவர் வழங்கியதுமே நிறைவான உரைகள். நிகழ்ச்சியின் இறுதியில் வழக்கம்போல் கலந்துரையாடல்.  இதன் ஒலிவடிவம் இங்கே கிடைக்கும். இந்த ஆறு...

மொட்டை மாடி புத்தக அறிமுகம் 6

இன்று மொட்டை மாடி புத்தக அறிமுக நிகழ்ச்சிகளின் இறுதி நாள். சோம வள்ளியப்பனின் ‘வாங்க பழகலாம்’ மற்றும் பாலு சத்யா எழுதிய ‘ஜார்ஜ் வாஷிங்டன்’ இன்று வெளியிடப்படவிருக்கின்றன. வள்ளியப்பன் நூல் குறித்து எஸ்.எல்.வி. மூர்த்தியும் பாலுவின் புத்தகம் பற்றி ஆர். வெங்கடேஷும் பேசுகிறார்கள். நேற்றைய கூட்டம் மிகச் சிறப்பாக நடந்தது. ஏராளமான புதிய தகவல்களுடன் சுவாரசியமாகப் பேசிய ப்ரவாஹனின் பேச்சை நீங்கள் பத்ரியின்...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!