கி. ராஜநாராயணன் குறித்து புதுவை இளவேனில் தயரித்திருக்கும் ‘இடைசெவல்’ என்கிற டாக்குமெண்டரி படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுத்தாளர் ஒருவரைப் பற்றி ஆவணப்படம் எடுப்பது எத்தனை சிரமமானது என்பது புரிந்தது. முன்பும் சில படங்கள் பார்த்திருக்கிறேன். அசோகமித்திரன் குறித்து அம்ஷன் குமார் எடுத்த படம். ஜெயகாந்தன் குறித்த படம். வைக்கம் முஹம்மத் பஷீர், ஓ.வி. விஜயன், யு.ஆர். அனந்த மூர்த்தி...