நேற்று டிஸ்கவரி வேடியப்பன் அழைப்பின் பேரில் ஆண்டிறுதி புத்தக இரவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன். நண்பர் சமஸையும் என்னையும் கேஎன் சிவராமன் கேள்விகள் கேட்டுப் பேச வைத்தார். நிகழ்ச்சியில் ஒரு வினா – புதிய எழுத்தாளர்களை நீங்கள் எவ்வாறு அடையாளம் காண்கிறீர்கள்? எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? சுமார் இருபதாண்டுகளாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலர் இதனைக் கேட்டுவிட்டார்கள். பதில் மிக...