நீ போக விரும்பும் வெளிநாடு எது என்னும் வினாவை என் மகள் பலமுறை கேட்டிருக்கிறாள். ஒவ்வொரு முறையும் நான் சொல்லும் பதில், சோவியத் ரஷ்யா. அவளுக்கு சோவியத் தெரியாது. அது எப்படி இறந்தது என்று தெரியாது. இப்போதைய ரஷ்யாவின்மீது எனக்கு ஆர்வமில்லை என்பதையும் சொல்லியிருக்கிறேன். இருந்தாலும் இக்கேள்வி திரும்பத் திரும்ப வரும். நான் என்றுமே செல்ல வாய்ப்பில்லாத அக்கற்பனை தேசத்தை மீண்டும் மீண்டும் நினைவுகூர்வேன்...
தினத்தந்தியின் வரலாற்றுச் சுவடுகள்
தினத்தந்தி வெளியீடான ‘வரலாற்றுச் சுவடுகள்’ புத்தகத்தை நேற்று வாங்கினேன். நல்ல பேப்பர் மசாலா தோசை அளவில் எண்ணூறுக்கு மேற்பட்ட பக்கங்கள். மொழுமொழுவென்று ஒவ்வொரு பக்கமும் படிக்காதே, முதலில் தடவு என்கின்றன. எல்லாம் கலர். கனமான அட்டை. கலைஞர் புண்ணியத்தில் முன்னூறு ரூபாய். இந்த வரலாற்றுச் சுவடுகள் தொடராக வந்துகொண்டிருந்தபோதே கொஞ்சகாலம் விடாமல் படித்திருக்கிறேன். ஆனால் பொதுவாகத் தொடர் படிக்கும்...