தனது பன்னிரண்டாம் வயதில் கோவிந்தசாமிக்கு ஞானம் பெறுவதில் தாகம் உண்டானது. பதினான்காம் வயதில் அவன் வீட்டை விட்டு ஓடிப் போனான். பதினைந்தில் ஒரு குருவைக் கண்டுபிடித்து அவரிடம் தனது உள்ளக்கிடக்கையைத் தெரிவித்துவிட்டு, அவருக்குக் கால் அமுக்கிவிட ஆரம்பித்தான். இரண்டு வருடங்களுக்குப் பிறகு தனது குரு ஒரு டுபாகூர் என்று தெரிந்துகொண்டு அவரைவிட்டு விலகினான். வித்தவுட்டில் தேசமெங்கும் சுற்றித் திரிந்துவிட்டு...
ஞானஸ்தன் (கதை)
பாரா ஒரு நாள் ஞானம் பெற்று பாராசான் என்னும் ஜென் குரு ஆனான். ஆனால் அவன் பாராசான் ஆனது ஊருக்குத் தெரியாது. அது ஊருக்குத் தெரியாது என்கிற சங்கதி பாராசானுக்கும் தெரியாது என்பதனால் ஏன் தன்னை நாடி முட்டாள்களோ சீடர்களோ இன்னும் வரவேயில்லை என்று அவன் தினமும் கவலைப்படலானான். ஒவ்வொரு புதிய முட்டாள் வரும்போதும் எப்படி அவர்களை மடக்கி, வியப்பூட்டி, பரவசப்படுத்தி, ஒரு ஓட்டாஞ்சில்லைத் தூக்கிப் போட்டு அதில்...