ஜனவரி 1985 முதல் சென்னை நகரத்தின் ஒரே பேட்டையில் தொடர்ந்து வசித்து வருபவன் நான். மேம்பாலங்களுடனான எனது உறவு அன்றைய தினமே தொடங்கியது. செங்கல்பட்டு மாவடத்தின் ஒரு சிறு கிராமத்திலிருந்து மூட்டை முடிச்சுகளுடன் நாங்கள் தாம்பரம் எல்லையைக் கடக்கவிருந்த சமயம் ஒரு மேம்பாலப் பணி நடந்துகொண்டிருந்தது. சிறிய மேம்பாலம்தான். ஆனால் சுமார் அரைமணி வழியில் காத்திருக்கவேண்டியிருந்தது. அதற்குமுன் ஒரு மேம்பாலம் எப்படி...
நகர(விடா) மையம்
பிறந்து வளர்ந்த சென்னைக்குள் என்னை அந்நியனாக உணரச்செய்யும் ஒரே தலம் என்கிற வகையில் எனக்கு அந்த ஷாப்பிங் மால் ஒரு முக்கியமான க்ஷேத்திரம். தீராத பிரமிப்புடன் திரும்பத் திரும்ப நினைத்துக்கொள்கிறேன். என்ன இது, எப்படி இது என்று ஒவ்வொருமுறையும் வியந்தே போகிறேன். நமக்கான இடமல்ல இது என்று எப்போதும் உறுத்தினாலும், அவகாசம் கிடைத்தால் போய்ப்பார்க்கலாம் என்றே அடிக்கடி தோன்றுகிறது. அவுட் டோர் ஷூட்டிங்குக்கு...