தனது முதல் சிறுகதையை எழுதி, ஒரு போட்டிக்கு அனுப்பிப் பரிசு பெற்ற ஒரு சகோதரி சில நாள்களுக்கு முன்னர் சந்திக்க வந்திருந்தார். திட்டங்களிலோ, மொழியிலோ, வெளிப்பாட்டிலோ அவருக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஓரளவு வாசிப்பு இருந்தது. தொடர்ந்து படித்துக்கொண்டும் இருந்தார். இருப்பினும் எழுதுவதில் சிறு தயக்கம் இருப்பதாகச் சொன்னார். படித்துவிட்டு யார் என்ன சொல்வார்களோ என்கிற அச்சம் இருந்தது புரிந்தது...