மேக் ஒழுக்கம் என்பது மென்பொருள்களை எங்கிருந்து தரவிறக்கம் செய்கிறோம் என்பதில் தொடங்குகிறது. ஆப் ஸ்டோரில் இருந்துதான் எதையும் வாங்குவது என்பது என் கொள்கை. இலவச மென்பொருள்களானாலும் சரி; காசு கொடுத்து வாங்குவதானாலும் சரி. அதிகாரபூர்வக் கடையில் மட்டும் வாங்கினால் ஆபத்து கிடையாது.
சிம்பிள் டெக்ஸ்ட் – செயலிக் குறிப்பு
இங்கே என்னைத் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு, ஒரு நல்ல டெக்ஸ்ட் எடிட்டருக்காக பன்னெடுங்காலமாக நான் நடத்தி வரும் துவந்த யுத்தம் பற்றித் தெரிந்திருக்கும். சும்மா நான்கு ஃபேஸ்புக் போஸ்ட் எழுதுகிறவர்களுக்கோ, ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் சிறுகதை எழுதுகிறவர்களுக்கோ இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. என்னைப் போல தினமும் ஆயிரம் சொற்களை நியமமாக வைத்திருப்பவர்களின் பிரத்தியேக இம்சை இது. மைக்ரோசாஃப்ட்...


