உத்வேகம் தரக்கூடிய புத்தகங்களுக்கு என்று ஒரு பெரிய சந்தை உண்டு. 2003ம் ஆண்டு விகடன் வெளியிட்ட இந்த மலர் அப்படிச் சந்தையில் இருக்கும் எந்தப் புத்தகத்தினும் சிறப்பானது, வீரியம் மிக்கது. வாசன் என்ற ஆளுமையை நேரில் கண்டு பழகியவர்களின் அனுபவங்கள்தாம். ஆனால் எதுவுமே வெறும் துதிக் கட்டுரைகள் அல்ல.
தீபாவளி மலர்கள்
இந்த ஆண்டு விகடன், லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்களுக்கு எழுதியிருக்கிறேன். விகடனில் ஒரு நகைச்சுவைக் கட்டுரை. லேடீஸ் ஸ்பெஷலில் ஒரு சிறுகதை. தொடர்ந்து அரசியலே எழுதிக்கொண்டிருப்பதால் சிறிது மூச்சுவிட்டுக் கொள்ளவும் வேண்டுமல்லவா? ஒரு காலத்தில் தீபாவளி மலரில் எழுதுவது என்பது தீபாவளியினும் பெரிய பண்டிகையாகக் கொண்டாடப்படும். மலரில் ஒரு துணுக்கு வெளியானால்கூட இனிப்பு அளித்துக் கொண்டாடியவர்களை அறிவேன்...


