நண்பர்களுக்கு வணக்கம். ஏப்ரல் முதல் தேதியில் இருந்து வாட்சப் சேனலில் ‘மிருது’ நாவலை எழுதத் தொடங்குகிறேன். இது நாள்தோறும் அங்கே பிரசுரமாகும்.
1. நேரக் கணக்கு கிடையாது. ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் பிரசுரிப்பேன். பிரசுரமானதில் இருந்து எட்டு மணி நேரம் மட்டுமே சேனலில் இருக்கும். பிறகு எடுத்துவிடுவேன்.
2. ஜந்துவுக்கு எழுதியதைப் போல இதற்கும் நாள்தோறும் / அத்தியாயம்தோறும் வாசகர்கள் மதிப்புரை எழுதலாம்.
3. அனைத்து அத்தியாயங்களுக்கும் மதிப்புரை எழுதியோர் மட்டுமே போட்டியில் பங்கேற்பாளர்களாகக் கருதப்படுவர். இடையில் நிறுத்தியவர்கள் பட்டியலுக்குள் வரமாட்டார்கள்.
4. மதிப்புரைகளுக்குச் சொல் வரையறையெல்லாம் இல்லை. நான்கு சொல்லாகவும் இருக்கலாம். நாற்பது வரிகளாகவும் இருக்கலாம். கச்சிதம் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும்.
5. உங்கள் மதிப்புரைகளை para.channelreviews@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டும் அனுப்பவும்.
6. வாசகர்களின் மதிப்புரைகளைப் படித்து மதிப்பிட்டு, சிறந்த மூன்று மதிப்புரையாளர்கள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு ‘மிருது’ நூலாக வரும்போது முதல் பிரதி பரிசளிக்கப்படும்.
7. இம்மதிப்புரைப் போட்டியின் நடுவராக இருக்க ‘வாசிப்பை நேசிப்போம்’ குழுவின் தலைவர் கதிரவன் ரத்தினவேலு சம்மதித்திருக்கிறார். அவருக்கு என் நன்றி.
முதல் தேதியிலிருந்து நான் ஆரம்பிக்கிறேன். அன்றே நீங்களும் தொடங்கலாம்.
பி.கு: மெட்ராஸ் பேப்பரில் எழுதும் யாருக்கும் போட்டியில் பங்குபெற அனுமதி இல்லை. அவர்கள் மதிப்புரை எழுதினால் பிரசுரிப்பேன். போட்டிக் கணக்கில் சேர்க்க மாட்டேன்.


