சரித்திரம் சில வினாக்களுக்குத் தெளிவான விடை தரும். சிலவற்றுக்கு எவ்வளவு தேடினாலும் அகப்படாது. கவனியுங்கள். அது அகப்படாததுதான். இல்லாததென்றோ, கிடையாதென்றோ ஒன்றில்லை. உரியின் பொருட்டு இராஜராஜ சோழனின் காலம் குறித்த ஆய்வறிஞர்களின் புத்தகங்கள் அனைத்தையும் வரிசையாகப் படித்துக்கொண்டிருந்த நாள்களில் அத்தகு விடையற்ற வினா ஒன்று அனைத்துக்கும் மேலாக எழுந்து சூழ்ந்து நின்றது. ஆட்சிக்கு வந்த நாள் முதல்...


