யதி எழுதிய நாள்களில் சிறிது பித்தேறிக் கிடந்தேன். கண்ணெதிரே நிகழ்வனவும் காதருகே வந்து சொல்லிவிட்டுச் செல்வனவும்கூடச் சிந்தையில் ஏற மறுத்த நாள்கள் நினைவிருக்கின்றன. தொடங்கும்போதோ முடிக்கும்போதோ அல்ல. இடையில் சில மாதங்கள் அவ்வாறு இருந்தன. பிறகு சுதாரித்துக்கொண்டேன். சலம் முற்றிலுமே என்னைப் புரட்டியெடுத்துவிடுமென்று நினைத்தேன். அதன் காலமும் (கிமு 1000-1200) களமும் மொழியும் எனக்கு அந்நியமானவை. நீண்ட...


