சென்னைவாழ் வாசக வைடூரிய வண்டுகள் கவனத்துக்கு. மனுஷ்யபுத்திரன் வெளியிட்ட அறிவிப்பைப் பார்த்திருப்பீர்கள். நாளை சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழு நடத்தும் உலகப் புத்தக தின விழாவில் கலந்துகொண்டு பேசுகிறேன். இடம்: அண்ணாசாலை தேவநேயப் பாவாணர் நூலக வளாகம். நேரம் மதியம் 2 மணி. ஓய்வு நாள்-கொளுத்தும் வெயில்-மதிய உணவுக்குப் பிறகு உடனே என்கிற முப்பெரும் தடைகளைத் தகர்த்தெறிய திராணியுள்ள அனைவரையும் அன்புடன்...
மெட்ராஸ் பேப்பர் விழா
மெட்ராஸ் பேப்பர் வாசகர் திருவிழா – 13 நூல்கள் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 11ம் தேதி புதன் கிழமை அன்று சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் சிறப்பாக நடந்தேறியது. விழாவினை நண்பர் கபிலன் (ஸ்ருதி டிவி) நேரலையில் கண்டு களிக்க வழி செய்தார். பெருந்திரளாகக் கூடிய வாசகர்களின் வாழ்த்து புதிய தெம்பையும் உற்சாகத்தையும் தந்தது. விழாவின் வீடியோக்கள் கீழே உள்ளன. விழாவில் எனது வரவேற்புரை...