இத்தொகுப்பில் உள்ள கதைகளை அதிகபட்சம் நாற்பது நாள் இடைவெளியில் எழுதினேன். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், தினம் தினம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் இறந்தவர்களின் எண்ணிக்கையையும் செய்திகளில் பார்த்துப் பார்த்துக் கிட்டத்தட்ட மனச்சோர்வு எல்லைக்குச் சென்றுவிடுவேன் என்று தோன்றியது. வலுக்கட்டாயமாக அதில் இருந்து என்னைப் பிடுங்கிக்கொள்ளவே வழக்கத்தைவிட நிறைய எழுதத் தொடங்கினேன். ஆதியிலே...
17ம் நூற்றாண்டு ஃப்ரெஞ்சு சுப்புடுவின் தொடைதட்டல்
14ம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள் மின் நூலுக்கு சி. சரவண கார்த்திகேயன் எழுதிய முன்னுரை: எங்கள் வீடு குமுதம் வாங்கும் வீடு. அது என் அம்மாவின் தேர்வு. பெண்களும் இலக்கியமும் சமமாய்க் கிளுகிளுப்பூட்டிக் கொண்டிருந்த என் பதின்மங்களின் மத்தியில் குமுதம் இதழ் கச்சிதமாய் எனக்கான தீனியாய் அமைந்திருந்தது. அது புத்தாயிரத்தின் தொடக்கம். குமுதம் வார இதழ் நான்கைந்து எழுத்தாளர்களின் பெயர்களைத் திரும்பத்...