வண்டி வருது என்பது திரை / சிறுதிரைத் துறைகளில் அடிக்கடிப் புழங்கும் இரு சொற்கள். யாரையோ எங்கோ அழைத்துச் செல்ல கார் அனுப்பப்பட்டிருக்கிறது; வந்துகொண்டிருக்கிறது; சில நிமிடங்களில் வந்துவிடும் என்பது இதன் பொருள். ஆனால், இதைச் சொல்லத் தொடங்கி குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகாமல் எந்த வண்டியும் என்றும் எங்கும் வந்ததில்லை. என் தனிப்பட்ட அனுபவம், ‘வண்டி வருது’ என்று நான் சொல்லத் தொடங்கினால்...
உயிரோடிருத்தல்
எல்லோருக்கும் வெளியே போகத் தேவை இருக்கிறது. அவசியம் இருக்கிறது. யாரும் வெட்டி இல்லை. சும்மா இருப்பவர்களுக்கும் வேலை தேடும் வேலையாவது அவசியம் இருக்கத்தான் செய்யும். துரதிருஷ்டவசமாக இந்நாள்கள் நம்மை வீட்டுக்குள் இருக்கச் சொல்கின்றன. கொடூரம்தான். வழக்கம் மாறும்போது வரக்கூடிய மனச்சிக்கல்கள் நிச்சயமாக இருக்கும். ஆனால் உயிர் பிரச்னைக்கு முன்னால் இதெல்லாம் பெரிதா என்று ஒவ்வொருவரும் ஒரு கணம் எண்ணிப்...