Tagகிழக்கு

மொட்டை மாடி 4ம் நாள்

கிழக்கு மொட்டை மாடி புத்தக அறிமுக நிகழ்ச்சிகளின் நான்காம் நாளான இன்று இரா. முருகனின் ‘நெ.40 ரெட்டைத் தெரு’ நூலினை ஜே.எஸ். ராகவன் வெளியிட்டுப் பேசுகிறார்.
அறிவியல் எழுத்தாளர் ராமதுரையின் ‘விண்வெளி’ உள்ளிட்ட சில அறிவியல் நூல்களை பத்ரி சேஷாத்ரி அறிமுகம் செய்கிறார்.
அனைவரும் வருக.
நேற்றைய கூட்டம் குறித்த பிரசன்னாவின் பதிவு இங்கே.
பத்ரி எழுதிய சிறு குறிப்பு + ஒலிப்பதிவுத் தொகுப்புகள் இங்கே.

இன்று வெளியீடு: ஆயில் ரேகை, ஒபாமா

இன்று மாலை 6.00 மணிக்கு மொட்டை மாடி விழாவில் வெளியிடப்படவிருக்கும் புத்தகங்கள்: 1. ஆயில் ரேகை. 2. ஆர். முத்துக்குமாரின் ஒபாமா பராக். ஆயில் ரேகை, ரிப்போர்ட்டரில் நான் தொடராக எழுதியது. உலக அளவில் பெட்ரோலியப் பொருள்களின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டிருந்த சமயம், எதனால் இது இப்படி என்று குழம்பித்தவிப்பவர்களுக்கு எளிமையாகப் புரியவைக்கும்படியாக எழுது என்று என் ஆசிரியர் இளங்கோவன் சொன்னார். தொடரை நான்...

கிழக்கு புத்தக அறிமுகக் கூட்டம் – 2

மொட்டை மாடி 2

நேற்றைய முதல் கூட்டம் பற்றிய விரிவான பதிவினை ஹரன் பிரசன்னா எழுதிவிட்டதால் நான் இங்கே எழுதவில்லை. அப்புறம் ஆபீஸ் போன பிறகு சில புகைப்படங்களை மட்டும் வெளியிடுகிறேன்.

சில புதிய புத்தகங்கள் – 3 [அறிமுகக் கூட்டம் – அழைப்பு]

நாளை மறுநாள் திங்கள் [22.12.2008] தொடங்கி ஒருவார காலம் கிழக்கு மொட்டை மாடிக் கூட்டம் தினசரி நடைபெறும். [27.12.2008 சனிக்கிழமை வரை.] இதில் தினசரி இரண்டு புதிய புத்தகங்களுக்கான வெளியீடு – அறிமுகம் நடைபெறவிருக்கிறது. திங்களன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் இரு நூல்கள்: கேண்டீட் மற்றும் சூஃபி வழி. பத்ரியின் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ள வோல்ட்டேரின் கேண்டீட்...

சில புதிய புத்தகங்கள் – 2

ஞாநியின் ‘ஓ பக்கங்கள்’ – பாகம் 3 இம்முறை கிழக்கு வெளியீடாக வருகிறது. விகடனில் ஏன் இப்போது ஞாநி எழுதுவதில்லை என்று இப்போதுகூட என்னிடம் சிலர் [என் உறவினர்களும்கூட] கேட்பதுண்டு. அவர்களுக்கு என் பதில், ‘குமுதத்தில் இப்போது எழுதுகிறார், படியுங்கள்’ என்பதுதான். விகடனிலிருந்து தாம் வெளியேறிய சூழல் பற்றி இந்தத் தொகுப்பில் ஞாநி எழுதியுள்ள பகுதியிலிருந்து சில வரிகள் கீழே. நேற்றைய கிழக்கு மொட்டை...

சில புதிய புத்தகங்கள் – 1

இணையத்தில் எழுதி இரு வாரங்களாகின்றன. உருப்படியாக எழுதி மூன்று மாதங்களுக்கு மேல். சென்னை புத்தகக் கண்காட்சி நெருங்குவதுதான் காரணம். வேலைகள் அதிகம். இருப்பினும், கண்காட்சிக்கென நாங்கள் வெளியிடும் புத்தகங்களுள் குறிப்பிடத்தக்க சிலவற்றைப் பற்றி இங்கே சிறு அறிமுகங்கள் செய்யலாம் என்றிருக்கிறேன். கண்காட்சியில் என்னுடைய புதிய நூல்கள் மூன்று இடம்பெறுகின்றன. 1. மாயவலை 2. Excellent. 3. ஆயில் ரேகை. ஆயில்...

ஒரு முக்கியமான புத்தகம்

அமெரிக்க அதிபராகத் தேர்வு பெற்றிருக்கும் பராக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாறினூடாக அமெரிக்கக் கருப்பர் இன சரிதம்.  தகவல் துல்லியம், சுருக்கம், தெளிவு. மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து எழுதியிருக்கிறார் ஆர். முத்துக்குமார். அமெரிக்கத் தேர்தல் முறை பற்றி தமிழக வாசகர்களுக்கு இருக்கக்கூடிய குழப்பங்கள் இந்தப் புத்தகத்தினால் தீரும். டிசம்பர் 6, 2008 அன்று இந்நூல் மதுரை புத்தகக் கண்காட்சியில்...

ஓர் அறிவிப்பு

எங்களுடைய நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் வெளியீடுகளான சில புத்தகங்களை, விருப்பமுள்ள வாசகர்களுக்கு – மதிப்புரை எழுதுவதற்கென இலவசமாக வழங்க முடிவு செய்திருக்கிறோம். இது பற்றிய விரிவான தகவல்களை நீங்கள் பத்ரியின் வலைப்பதிவில் காணலாம். பின்வரும் புத்தகங்கள் முதல் கட்டமாக இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன: 1. நான் வித்யா – லிவிங் ஸ்மைல் வித்யா 2. ஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ் –...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!