சென்னை மாநகர நூலக ஆணைக் குழுவின் சார்பில் நவம்பர் 14 ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை சென்னை தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் எழுத்தாளர்கள்-கலைஞர்களைப் பற்றிய ஆவணத் திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. கு. அழகிரிசாமி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, வண்ணதாசன், இந்திரா பார்த்தசாரதி, கிரா, சுரேஷ் குமார இந்திரஜித், ஞானக்கூத்தன் உள்ளிட்ட பல தமிழ் படைப்பாளிகளைக் குறித்த ஆவணப்படங்கள் இந்த விழாவில்...
ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 27
மௌபரீஸ் ரோடு என்று சென்னையில் ஒரு சாலை இருந்ததைக் குறித்து கண்ணதாசனின் வனவாசத்தில்தான் முதலில் அறிந்தேன். ஒரே அத்தியாயத்தில் இரண்டு மூன்று இடங்களில் கண்ணதாசன் அந்தச் சாலையைப் பற்றி அதில் எழுதியிருப்பார். முதல் முதலில் சென்னைக்கு வந்து இறங்கியதும் மௌபரீஸ் ரோடில் இருந்த சக்தி காரியாலயத்துக்குச் சென்றது பற்றியும் அங்கே தனது பழைய நண்பர் வலம்புரி சோமனாதனைச் சந்தித்தது பற்றியும் ஓரிடத்தில். ஒரு...