சிந்தனையில் மினிமலிசம் என்பது எதையும் சிந்திக்காதிருப்பதல்ல. அது சாத்தியமற்றது. ஆனால் அந்தந்தத் தருணங்களுக்குத் தேவையற்றதைத் தள்ளி வைக்க முடியும்.
அன்பில் ஊறிய தோஷம்
என் கசடுகளை என்னால் முற்றிலுமாகப் பெருக்கித் தள்ள முடியுமோ முடியாதோ. என் கசடுகள் என்னென்ன என்று அறிவதற்கு எழுத்து எனக்கு உதவுகிறது. என் குறைகளை நான் பூரணமாக அறிந்தவன் என்பது பெரிய விடுதலை. இதை விவரிக்கவே முடியாது. அவ்வளவு ஆசுவாசம் தரும். ஆனால் என்ன பிரச்னை என்றால், அந்த ஆசுவாசம் குற்ற உணர்வு என்னும் பை-ப்ராடக்டுடன் வரும்.


