என் கசடுகளை என்னால் முற்றிலுமாகப் பெருக்கித் தள்ள முடியுமோ முடியாதோ. என் கசடுகள் என்னென்ன என்று அறிவதற்கு எழுத்து எனக்கு உதவுகிறது. என் குறைகளை நான் பூரணமாக அறிந்தவன் என்பது பெரிய விடுதலை. இதை விவரிக்கவே முடியாது. அவ்வளவு ஆசுவாசம் தரும். ஆனால் என்ன பிரச்னை என்றால், அந்த ஆசுவாசம் குற்ற உணர்வு என்னும் பை-ப்ராடக்டுடன் வரும்.
ஒழுங்கீனம், ஒரு கேள்வி: சிகரம் பாரதி
நாம் நிறைய வேலை செய்வதாக, எப்போதும் பணியில் தீவிரமாக இருப்பதாக எண்ணிக்கொள்வது ஒரு பாவனை அல்லது மாயை. விலகி நின்று நமது பணியை நேர்மையாக மதிப்பிட்டால் ஒரு நாளில் நான்கில் ஒரு பங்கு நேரத்தைக் கூட நாம் நேர்த்தியாகச் செலவிடுவதில்லை என்பது புரியும்.
மதமும் ஆன்மிகமும்: கடிதம், ஆண்டனி ஃப்ரான்சிஸ்
நான் பயிலும் ஆன்மிகம் வேறு. அது மதத்தின் தொடர்பற்றது. அதாவது சொல்லி வைக்கப்பட்டதை அப்படியே நம்பி ஏற்காமல், எதையும் கேள்வி கேட்டு பதிலைத் தேடிப் பெறுகிற வழி.
நாளும் கள்ளும்: ஒரு கேள்வி – ரமணன்
சலத்தில் பலவிடங்களில் தாங்கள் ‘நாள்கள்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். இச்சொல் தொடர்பாக எனக்கிருக்கும் நீண்டகாலச் சந்தேகமொன்றை இங்கே தங்கள் முன் வைக்கிறேன்.
32
சொக்கன் அனுப்பிய 32 கேள்விகளும் என் பதில்களும்: 1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா? இது என் சொந்தப்பெயர். பத்திரிகை நாள்களில் பல புனைபெயர்களில் எழுதியிருக்கிறேன். ஆனாலும் என் சொந்தப்பெயரில் எழுதுவதே எனக்குத் திருப்தி அளிக்கிறது. யாராவது கூப்பிடும்போது ராகவன் என்று கூப்பிடாமல் பாரா என்றால்தான் சரியாக பதில் சொல்கிறேன் என்று சில நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்...


