ரேவதி என்கிற ஈ.எஸ். ஹரிஹரன் நேற்றிரவு காலமானார் என்று இன்று காலை தகவல் வந்தது. வாழ்வில் யார் யார் இல்லாவிட்டால் இன்றைய நான் இல்லை என்று எண்ணிப் பார்த்தேன். அந்தச் சிறிய பட்டியலில் அவர் இருந்தார்.
உறங்காத அலை
இந்தக் கதையை நான் இதுவரை சொன்னதில்லை. சொந்த சோகங்களைப் பொதுவில் வைக்கக்கூடாது என்ற கொள்கை காரணம். இப்போது ஏன் சொல்கிறேன் என்றால் இந்த சோகம் காலாவதியாகிவிட்டதனால்தான். நான் கல்கியில் வேலை பார்த்ததும் அங்கிருந்து குமுதம் சென்றதும் உங்களுக்குத் தெரியும். ஆனால் விலகிய சமயத்தில் உண்டான பிரச்னை மிகப் பெரிது. அந்த வயதின் அறியாமை, ஆத்திரம், விவரிக்க முடியாத கடுங்கோபம் எல்லாம் சேர்ந்து மூன்று மாத நோட்டீஸ்...


