முன்னொரு காலத்தில் மனோரமா இயர்புக் வாங்குவதும் படிப்பதும் எனக்கு மிகுந்த விருப்பத்துக்குரிய செயலாக இருந்தது. எந்த அரசுத் தேர்வோ, வேலை வாய்ப்போ எனக்கு நோக்கமாக இருந்ததில்லை. அதற்குத்தான் அந்தப் புத்தகம் என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் என் பொது அறிவை விருத்தி செய்தே தீருவது என்ற வெறியுடன் வருடம்தோறும் வாங்கி வாசிப்பேன். ஒரு எழுநூறு எண்ணூறு பக்கப் புத்தகத்தை அப்படியே மனத்தில் ஏற்றிக்கொள்வது இயலாத...
ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 30
நகரம் என்பது மண் அல்ல. நகரம் என்பது மனிதர்களும் அல்ல. நகரம் என்பது நினைவுகள். நகரம் அல்லாத பிராந்தியங்களில் வசிப்பவர்களுக்கு மண்ணும் மனிதர்களும் முக்கியமாகத் தெரிவார்கள். நகரவாசிகளுக்கு நினைவுகள் மட்டுமே நெடுந்துணை. ஏனெனில் இங்கே வந்து போகிறவர்கள் மிகுதி. நிலைத்திருப்போர் ஒப்பீட்டளவில் குறைவானவர்கள். மண்ணின் மக்கள் என்போர் அதனினும் குறைவு. ஒரு விதத்தில் நானும் வந்தேறி வம்சம்தான். என் தாத்தாக்கள்...