இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தில் என் நண்பர் நரசிம்மன் மூலமாக இயக்குநர் விக்கிரமாதித்தனின் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவர் மெட்டி ஒலி நெடுந்தொடரில் இரண்டாவது யூனிட் இயக்குநராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். நான் பத்திரிகைப் பணியில் இருந்து விலகி பதிப்புத் துறையில் ஈடுபடத் தொடங்கியிருந்தேன். தனியே ஒரு தொடரை இயக்குவதற்கான முயற்சிகளில் இருந்த அவரிடம் அப்போது ஒரு கதை சொன்னேன். பிறகு பல...
யாருக்கும் இழப்பில்லை
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகத் தீவிரமாகத் திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது தீவிரம்கூட அல்ல. அதைத் தாண்டியதொரு வெறி கொண்ட வேட்கை. இந்தியப் படங்கள், உலகப் படங்கள், ஹாலிவுட் படங்கள், கொரியன் படங்கள், சீனாவின் பிரசித்தி பெற்ற கராத்தே, குங்ஃபூ படங்கள், இந்த எந்த இனத்துடனும் சேராத மசாலா டப்பிங் படங்கள் இப்படி. எந்தத் திரைப்பட விழாவையும் தவறவிட்டதில்லை. அதேபோலத் தமிழ்ப் படங்கள்...