இங்கே என்னைத் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு, ஒரு நல்ல டெக்ஸ்ட் எடிட்டருக்காக பன்னெடுங்காலமாக நான் நடத்தி வரும் துவந்த யுத்தம் பற்றித் தெரிந்திருக்கும். சும்மா நான்கு ஃபேஸ்புக் போஸ்ட் எழுதுகிறவர்களுக்கோ, ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் சிறுகதை எழுதுகிறவர்களுக்கோ இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. என்னைப் போல தினமும் ஆயிரம் சொற்களை நியமமாக வைத்திருப்பவர்களின் பிரத்தியேக இம்சை இது. மைக்ரோசாஃப்ட்...
டாஞ்ஞெட்கோ என்னும் இம்சை
இந்த தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ஓர் இணையத்தளம் இருக்கிறதல்லவா? கவிக்கோ, கொக்கோ போல அதன் பெயர் டாஞ்ஞெட்கோ. அதில்தான் பல வருடங்களாக மின் கட்டணம் செலுத்தி வருகிறேன். என்ன ஒரு சிக்கல் என்றால், ஒவ்வொரு முறை நான் லாகின் செய்யும்போதும் கடவுச் சொல் தவறு என்று சொல்லும். சொல்லிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றுவிடும். அதுவும் ஒரு சங்கேதக் குறி போலவென நினைத்துக்கொண்டுவிடுவேன். இந்தப் பல்லாண்டு கால வழக்கத்தை...