போதி மரத்துக்கு எந்தச் சிறப்பும் கிடையாது. சிறப்பெல்லாம் புத்தருக்குரியதே. ஆனால் அவர் தினம் ஒரு மரத்தடியைத் தேடிச் சென்று அமர்ந்திருந்தால் நிச்சயமாக வேலை கெட்டிருக்கும் என்றுதான் தோன்றுகிறது.
வரம்
நெடுநாள் போராடித் தோற்றுவிட்டது போலத் தோன்றியது. வாழ்ந்த நாள்களில் எண்பது சதவீதம் இருக்குமா? அதற்கு மேலேயே இருக்கலாம். வீட்டைத் துறந்து, படிப்பை விடுத்து, உறவுகளை மறந்து, சந்தோஷங்களை இழந்து நாடோடியாக எங்கெங்கோ அலைந்து திரிந்தாகி விட்டது. பிச்சை உணவு பழகிவிட்டது. மான அவமானங்களை எண்ணிப் பார்ப்பதில்லை. தியானமும் தவமும் வேட்கையுமாக நதிப் படுகைகளில், மலைக் குகைகளில், அடர்ந்த கானகங்களில் வாழ்க்கை உருகி...