1998 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஜவாஹிரி தமது இயக்கத்தை அல் காயிதாவுடன் இணைத்தார். அதே ஆண்டு ஆகஸ்டில் கென்யாவிலும் தான்சானியாவிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மீது அல் காயிதா நடத்திய தாக்குதல்களை அவர்தான் ஒசாமாவுடன் இணைந்து வடிவமைத்தார்.
புதிய தொடர் அறிவிப்பு
மீண்டும் தாலிபன் இன்று மாலை நான்கு மணிக்கு #bynge-வில் வெளியாகத் தொடங்கும். ISISக்குப் பிறகு நேற்று வரை அரசியல் எழுதாதிருந்தேன். இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு. அதெல்லாம் என் தனிப்பட்ட விவகாரம். ஆனால் நூற்றுக் கணக்கான வாசகர்கள் தொடர்ந்து இது குறித்துக் கேட்டுக்கொண்டே இருந்ததை நீங்கள் இங்கே வெளியாகும் கமெண்ட்களிலேயே பார்த்திருக்கலாம். தினமும் மின்னஞ்சல்கள். சந்திக்க நேரும் போதெல்லாம்...


