இந்த ஆண்டு விகடன், லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர்களுக்கு எழுதியிருக்கிறேன். விகடனில் ஒரு நகைச்சுவைக் கட்டுரை. லேடீஸ் ஸ்பெஷலில் ஒரு சிறுகதை. தொடர்ந்து அரசியலே எழுதிக்கொண்டிருப்பதால் சிறிது மூச்சுவிட்டுக் கொள்ளவும் வேண்டுமல்லவா? ஒரு காலத்தில் தீபாவளி மலரில் எழுதுவது என்பது தீபாவளியினும் பெரிய பண்டிகையாகக் கொண்டாடப்படும். மலரில் ஒரு துணுக்கு வெளியானால்கூட இனிப்பு அளித்துக் கொண்டாடியவர்களை அறிவேன்...
மலர்களே மலர்களே
தீபாவளி மலர்களை ஒரு காலத்தில் வெறித்தனமாக நேசித்திருக்கிறேன். புதுத்துணியோ பட்சணங்களோ, பாப்பையாக்களின் பட்டிமன்றங்களோ, புதுரிலீஸ் படங்களோ அல்ல. கல்கி, அமுதசுரபி, கலைமகள், ஓம் சக்தி, குண்டூசி, விஜயபாரதம் தீபாவளி மலர்களுக்காகவே தீபாவளியை விரும்பக்கூடியவனாக இருந்தேன். ஒவ்வொரு மலரையும் எடுத்து வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாகத் தடவித் தடவி கடைசிப்பக்கம் வரை முதலில் ஒரு புரட்டு. அதிலேயே சுமார் இரண்டொரு...