ஜனவரி 4ம்தேதி [நாளை] இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. புத்தாண்டைப் புத்தகங்களுடன் ஆரம்பிக்க விரும்புகிறவர்கள், சேத்துப்பட்டு செயிண்ட் ஜான்ஸ் பள்ளிக்கூட மைதானத்துக்கு வந்துவிடுங்கள். தீபாவளி, பொங்கல், வருடப்பிறப்பெல்லாம் ஒரு பண்டிகையா? இதுதான். இதுமட்டும்தான். ஒரு காலத்தில், தமிழர்கள் புத்தகம் வாங்குவதே இல்லை; ஆயிரம் காப்பி விற்றால் அமோகம் என்று சில பழம்பெரிசுகள் எப்பப்பார்...
இன்னும் ஒரு மாதம் இருக்கு.
சினிமாக்காரர்களுக்கு தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, சுதந்தர தினம், பிள்ளையார் சதுர்த்தி, விட்டால் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை. தமிழ் நாட்டிலே, எழுதி உயிர்த்திருக்கும் ஜீவாத்மாக்களுக்குப் புதுப் புத்தகம் என்றால் ஜனவரி புத்தகக் கண்காட்சி. பத்து நாள்கள் அல்லது கொசுறாக ஒன்றிரண்டு நாள்கள் சேர்த்து நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியை மனத்தில் வைத்துத்தான் புத்தகங்கள் எழுதப்படுகின்றன. ஆகஸ்டு...
மலர்களே மலர்களே
தீபாவளி மலர்களை ஒரு காலத்தில் வெறித்தனமாக நேசித்திருக்கிறேன். புதுத்துணியோ பட்சணங்களோ, பாப்பையாக்களின் பட்டிமன்றங்களோ, புதுரிலீஸ் படங்களோ அல்ல. கல்கி, அமுதசுரபி, கலைமகள், ஓம் சக்தி, குண்டூசி, விஜயபாரதம் தீபாவளி மலர்களுக்காகவே தீபாவளியை விரும்பக்கூடியவனாக இருந்தேன். ஒவ்வொரு மலரையும் எடுத்து வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாகத் தடவித் தடவி கடைசிப்பக்கம் வரை முதலில் ஒரு புரட்டு. அதிலேயே சுமார் இரண்டொரு...
ரஜினி ரசிகன்:சில குறிப்புகள்
[சற்று முன்னதாகவே இங்கு வெளியிட்டிருக்க வேண்டும். தாமதத்துக்குக் காரணம் மடினிப் பழுது.] அயோத்தி தீர்ப்பு. காமன்வெல்த் குளறுபடிகள். தஞ்சை கோயிலின் ஆயிரமாவது பர்த் டே. தடியூன்றும் வயதிலும் இளவரசராகவே இருக்கும் சார்லஸ் வந்தது. கொடநாட்டு தேவதை குடியிருப்புக் கேந்திரங்களுக்கு இறங்கிவந்து போராடத் தொடங்கியது. மதராசில் மழை. ஈக்வடாரில் புரட்சி. பர்வேஸ் முஷரஃபின் புதுக்கட்சி – எதையாவது தங்கத்...
ஆவணி அவஸ்தைகள்
பாவப்பட்ட ஆனி, ஆடி மாதங்கள் முடிந்து, தாவணிகளுக்கு ப்ரமோஷன் கொடுக்கும் ஆவணிக்காலம் பிறந்தது முதல், நாளொரு கல்யாணம், பொழுதொரு ரிசப்ஷன். கல்யாண வயசில் எனக்கு இத்தனைபேர் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதே இப்போதுதான் தெரியவருகிறது. கடந்த பத்துப் பதினைந்து நாள்களுக்கு மேலாக அதிதீவிரத் திருமணத் தாக்குதல்களால் என் அன்றாட நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதற்குமுன் இப்படி தினமொரு...
குச்சுப்புடி காண்டம்
முன்னொரு காலத்தில் நான் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் பள்ளி வருடாந்திர விளையாட்டு தினத்தில் ஸ்லோ சைக்கிள் ரேஸ் என்றொரு பந்தயம் இருக்கும். நூறு மீட்டர் தொலைவை சைக்கிளில் கடக்கவேண்டும். யார் கட்டக்கடைசியாக வருகிறாரோ அவரே ஜெயித்தவர் என்பது விதி. ஒரு மிதி அழுத்திப் போட்டால் போச்சு. பெடலைப் பெண் மாதிரி தொடவேண்டும். அழுத்தாமல் வருடவேண்டும். அங்குல அங்குலமாக நகர்த்தவேண்டும்...
நீரில் மிதக்கும் தேசம்
நிகழும் விக்ருதி வருஷம் ஆவணி மாதம் சுக்லபட்சம் நாளது தேதி வரைக்கும் இந்தப் பூவுலகில் நிகழ்ந்த மாபெரும் இயற்கைப் பேரழிவுகளில் ஒரு நாலஞ்சாவது நமக்கு உடனே உடனே நினைவுக்கு வரக்கூடியவை. ஒண்ணுமே தோன்றாவிட்டாலும் பல்ராம் நாயுடுவை நினைவுகூர்ந்து, அந்த சுனாமியைச் சட்டுபுட்டெனச் சொல்லிவிடுவோம். கொஞ்சம் யோசித்து குஜராத் பூகம்பம் என்போம். பரந்த அல்லது பறந்த அனுபவஸ்தர்கள் அமெரிக்க மண்ணிலே, சப்பானிய யென்னிலே...
இன்னொரு கந்தசாமியின் கதை
வீதியின் இருபுறமும் குழிகள் தோண்டி, சவுக்குக் கட்டைகள் நட்டார்கள். எங்கிருந்தோ பிடுங்கிவரப்பட்ட தென்னை ஓலைகள் சரசரவென்று பின்னப்பட்டுக் கூரை ஏறின. உபயதாரர் பெயர் எழுதப்பட்ட குழல் விளக்குகள், பொதுவில் உருவப்பட்ட மின்சாரத்தில் மினுங்கி எரியத் தொடங்கின. லவுட் ஸ்பீக்கரில் எல்.ஆர். ஈஸ்வரி உயிர் பெற்றதும் என் வீட்டு வாசலில் ஆடி மாதம் பிறந்தது. நம் நாட்டில் கேள்வி கேட்க முடியாத விஷயங்களுள் இதுவுமொன்று...