புத்தகக் காட்சியை முன்னிட்டு சன் டிவி வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் ஒரு பேட்டிக்கு அழைத்திருந்தார்கள். நேற்று (பிப்ரவரி 23) ஒளிபரப்பான அந்நிகழ்ச்சி இன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது. கீழே அதனைக் காணலாம்.
பாடுபொருள்
என்னிடம் உள்ள நூற்றுக் கணக்கான கெட்ட பழக்கங்களுள் ஒன்று, பிறகு பார்க்கலாம் என்று தள்ளி வைப்பது. எதையெல்லாம் அப்படித் தள்ளி வைக்கிறேனோ, பெரும்பாலும் அது பிறகு நடப்பதே இல்லை. இந்தத் தள்ளிப் போடுவதில் முதன்மையானது, யாரையாவது சந்திக்க வேண்டும் என்று நினைத்து, அதைத் தள்ளிப் போடுவது. சென்ற சென்னை புத்தகக் காட்சி நடந்துகொண்டிருந்தபோது ஒருநாள் கண்காட்சியில் இருந்து விரைவாக வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்...
அசுவமேதம் (கதை)
எனக்குத் தெரியும். நான் ஒரு புத்தகத் திருடன் கையில் அகப்பட்டிருந்தேன். நான் ஒரு பட்டத்துக் குதிரை என்பதையோ என்மீது அலெக்சாண்டர் அமர்ந்திருக்கிறான் என்பதையோ திருடன் பொருட்படுத்தவில்லை. அவன் கண்காட்சி முழுவதும் என்னைத் தேடித்தான் சுற்றி அலைந்திருகிறான். இது எனக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. ஏனெனில், ஓர் அரங்கின் மேல் அடுக்குப் பிரபல புத்தகக் குவியல்களையெல்லாம் விட்டுவிட்டு, மண்டியிட்டுக் கீழே...