‘நள்ளிரவு நெருங்குகிறது; அத்தியாயம் இன்னும் வரவில்லை’ என்று அதே நேரத்தில் ஒரு மின்னஞ்சல் வருகிறது. அத்தியாயம் பிரசுரமானதும், ‘அத்தியாயம் வந்துவிட்டது’ என்று அதே வாசகர் அக்னாலட்ஜ் செய்கிறார். அந்நேரத்தில் விழித்திருந்து அத்தியாயத்தைப் படித்துவிட்டு மூன்று பேர் மதிப்புரை எழுதுகிறார்கள். நான்கு மீம்கள் வருகின்றன. என்ன நடக்கிறது என்று எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.
மிருது மீம் போட்டி அறிவிப்பு
ஜந்துவை வாட்சப் சேனலில் தொடராக எழுதிய சமயத்தில் எந்தப் போட்டி அறிவிப்பும் இல்லாமலேயே மீம் புரட்சி செய்த வாசக நண்பர்களுக்கு வணக்கம்.
உங்கள் ஈடுபாட்டை மதித்து இம்முறை போட்டி அறிவிக்கிறேன்.
மிருது – புதிய நாவல் அறிவிப்பு
சலத்தின் தீவிரத்தில் இருந்து விடுபட எனக்குள்ள ஒரே வழி, உக்கிரம் இல்லாத, மிருதுவான வேறொன்றை எழுதிக் கடப்பதுதான். எனவே, அடுத்த நாவல் ‘மிருது’வைத் தொடங்குகிறேன்.


