கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 31)

கதையில் வரும் அனைவருமே இப்போது வனத்தை நோக்கிப் படையெகுழுவைத் தொடர்ந்துடுக்கின்றனர். ஒரே வித்தியாசம், ஒவ்வொருவருக்கும் வனத்திற்கு செல்லும் காரணமானது வேறுபடுகிறது. சூனியனின் குழு மற்றும் சாகரிகாவின் நோக்கிப் படையெடுக்கின்றனர் இப்போது கோவிந்தசாமியும் வனத்திற்கு செல்கிறான்.
அவனைக் கடைசியாக நாம் மருத்தவமனையில் பார்த்தோம், அங்கே அவனுக்கு ஒரு அன்பான நர்ஸ் ஒருத்தி, கோவிந்தசாமியின் கதையைக் கேட்டு ஆறுதல் கூறி, சாகரிகாவை அடைய ஒரு வழி சொல்கிறாள். அவளின் சொல் கேட்டு, மந்திர மலரைப் பறித்து வந்து சாகரிகாவை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதென முடிவு செய்து, கோவிந்தசாமி நீலவனத்திற்கு கிளம்பிச் செல்கிறான்.
“தலைகீழாக நின்றாலும் நீலநகரத்தில் தாமரை மலராது” போன்ற வரிகள் குபீர். நீல வனத்தில் என்ன நடக்க போகிறதென்கிற ஆவலுடன் அடுத்த அத்தியாயத்திற்கு காத்திருப்போம்.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!

Add comment

By Para

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive new posts by email.

தொகுப்பு

Links

Join here

RSS Feeds

R.P. Sarathy

எழுத்துக் கல்வி