நீங்கள் ஒரு சரித்திரக் கதை எழுதுவீர்களா என்னும் வினாவை இதுவரை குறைந்தது பத்து முறையேனும் பேட்டிகளில் எதிர்கொண்டிருப்பேன். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் வாசகர்கள் கேட்டதைச் சேர்த்தால் குறைந்தது நூறு முறை. ஆனால் ஒவ்வொரு முறையும் மாட்டேன் என்பதற்கு அப்பால் இன்னொரு பதிலைச் சொன்ன நினைவில்லை. என்னால் ஒரு சரித்திரக் கதையை எழுத முடியும் என்று இன்றுவரை நான் நம்பவில்லை. புழக்கத்தில் உள்ள பல...
உரி: சில குறிப்புகள் – 1
யதி எழுதிய நாள்களில் சிறிது பித்தேறிக் கிடந்தேன். கண்ணெதிரே நிகழ்வனவும் காதருகே வந்து சொல்லிவிட்டுச் செல்வனவும்கூடச் சிந்தையில் ஏற மறுத்த நாள்கள் நினைவிருக்கின்றன. தொடங்கும்போதோ முடிக்கும்போதோ அல்ல. இடையில் சில மாதங்கள் அவ்வாறு இருந்தன. பிறகு சுதாரித்துக்கொண்டேன். சலம் முற்றிலுமே என்னைப் புரட்டியெடுத்துவிடுமென்று நினைத்தேன். அதன் காலமும் (கிமு 1000-1200) களமும் மொழியும் எனக்கு அந்நியமானவை. நீண்ட...


