சலம் – உரி – யதி மூன்றும் வேறு வேறு களம், வேறு வேறு காலம், வேறு வேறு மனிதர்களின் வாழ்க்கை. எந்த விதத்திலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றது என்று நிறுவிவிடுவது மிகவும் சுலபம். ஆனால் எனக்கு இம்மூன்று நாவல்களும் ஒரு நாவலின் மூன்று அங்கங்கள் மட்டுமே. உலகில் வேறெந்தப் பகுதியிலும் இல்லாத அளவுக்கு இந்தியத் துணைக் கண்டத்தில்தான் ஆன்மிகமும் பக்தி இயக்கமும் பல்வேறு வடிவங்களில் பல்கிப் பெருகித்...
நேர்த்தி
என் மனைவி எப்போதும் சொல்வது ஒன்றுண்டு. எதையும் அளவுடன். உணவு தொடங்கி உணர்ச்சிகள் வரை அனைத்துக்கும் பொருந்தக்கூடிய சூத்திரம்தான். ஆனால் அது எத்தனை பெரிய சிரமம் என்பது எனக்கு மட்டுமே தெரியும். என்னால் நூறு சதவீத அர்ப்பணிப்பைத் தர இயலாத எது ஒன்றின் மீதும் விரைவில் அக்கறை இழந்து போய்விடுகிறேன்.


