தீவிரமாக எதையும் நான் சமூக வெளியில் எழுதுவதில்லை. முக்கியமாக அரசியலை அறவே தவிர்க்கிறேன். என்னை மீறி ஒரு சில சந்தர்ப்பங்களில் அரசியல் பேசப் போகும்போது பெரும்பாலும் அது கொதிநிலையைத் தாண்டி வெடிநிலையைக் கண்டுவிடுவதை விழிப்புணர்வுடன் கவனித்திருக்கிறேன். அதனாலேயே தவிர்ப்பதில் கவனம் செலுத்துகிறேன்.
விலகியிருத்தல்
சில தினங்களாக நண்பர்கள் பலர் அடிக்கடி நலம் விசாரிக்கிறார்கள். உடம்புக்கு ஒண்ணும் இல்லியே? ஏன், நல்லாத்தான் இருக்கேன். ஃபேஸ்புக்ல காணமேன்னு கேட்டேன். உண்மையில், மணிப்பூர் கலவரம் புத்தகத்துக்கான எழுத்துப் பணி தொடங்கியதில் இருந்து என் அன்றாட ஒழுங்கு அல்லது ஒழுங்கின்மை முற்றிலும் மாறிவிட்டது. முன்போல இப்போதெல்லாம் இரவு நெடுநேரம் கண் விழித்து எழுத முடிவதில்லை என்பதால் பகலிலும் சிறிது நேரம் வேலை செய்ய...