என்னுடைய ஒய்யார ஒழுங்கீனங்கள் குறித்துப் பலமுறை எழுதியிருக்கிறேன். அதில் முக்கியமான ஓர் ஒழுங்கீனத்தைப் பற்றி எப்படியோ இதுவரை எழுதாது விட்டிருக்கிறேன். நேற்று மாமல்லனுடன் பேசிக்கொண்டிருந்தபோது இந்த விவகாரம் வந்து போனதால் இப்போது எழுதிவிடுகிறேன். நான் ஒரு மூலவர். அதாவது எதற்காகவும் எழுந்து நகர்ந்து போகாத ஆலமரத்தடிப் பிள்ளையார். என் மனைவியின் கருத்துப்படி சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் மட்டுமே என்...
fifine K 678 – ஒரு மதிப்புரை
இந்த மைக்கைப் பற்றி வெங்கட் எனக்குச் சொன்னார். ஒலிச் சுத்தம் நன்றாக இருப்பதையும் பயன்பாடு எளிதாக உள்ளதையும் அவரது அலுவலக அறையில் கண்டேன். நாளெல்லாம் ஹெட்போன் மாட்டிக்கொண்டிருக்கும் இம்சையில் இருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கையில் இது நடந்ததால் உடனே அமேசானில் ஆணையிட்டு, இன்று வீட்டுக்கு வந்து சேர்ந்தது. இன்னொரு காரணம், ஹெட்போனை மாட்டிக்கொள்ளும்போது கணித் திரையில் நமது மேனி...
அழைப்பான்களின் காலம்
வாட்சப், ஃபேஸ்புக் மெசஞ்சர், டெலிகிராம் மற்றும் கட்டண மெசேஜ் சேவைகளை எதற்காக, எவ்வளவு பயன்படுத்துகிறேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். வாட்சப் வந்த பின்பு கட்டண மெசேஜ் அனுப்பும் வழக்கம் அறவே இல்லாமல் போய்விட்டது. எப்போதாவது என் மனைவிக்கு மட்டும் சாதாரண மெசேஜ் அனுப்புவேன். அதுவும் இருவருடையதும் ஐபோன் என்பதால் காசில்லா ஐமெசேஜ். மற்றபடி வங்கியில் இருந்து, க்ரெடிட் கார்ட் நிறுவனத்தில் இருந்து, இதர...