Categoryபுத்தகக் காட்சி 2011

புரட்சி படுத்தும் பாடு

நல்ல கூட்டம் நன்றி பத்ரி என்பது தவிர, ஒரு ஞாயிற்றுக்கிழமைக் கூட்டத்தைப் பற்றி வேறுவிதமாகக் குறிப்பிட ஒன்றுமில்லை. காலை கண்காட்சி தொடங்கிய முக்கால் மணி நேரத்தில் நான் திட்டமிட்டபடி சிறு பதிப்பாளர்களின் கடைகளை மட்டும் தேர்ந்தெடுத்துச் செல்லத் தொடங்கினேன். சிங்கிள், டபிள், ஃபோர் ஸ்டால்களால் நிறைந்த கண்காட்சியில் சிங்கிளாக நின்று ஆடுகிறவர்கள் இவர்கள். நேற்றுப் பிறந்தவர்களில் தொடங்கி பல...

இன்று சுஜாதா தினம்

பதிப்பாளர்களைப் பொறுத்தவரை இன்றுதான் நிஜமான புத்தகக் கண்காட்சித் தொடக்கம். நேற்றுவரை வராத மக்கள் அத்தனை பேரும் சேர்ந்து படையெடுத்துவிட்டார்கள். காலை முதலே நல்ல ஆள் நடமாட்டம் இருந்தது. மதியத்துக்குப் பிறகு கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து, மாலை நடக்கவும் முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளம். வெளியே வண்டி பார்க்கிங் பகுதியில் தகராறெல்லாம் நடந்ததாகக் கேள்விப்பட்டேன். கிழக்கு உள்பட இன்று எந்த அரங்கினுள்ளும்...

பால்கோவா தினம்

திருப்பதி லட்டு, திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன், ஃபுட்டிங் கேக், தஞ்சாவூர் அசோகா, சந்திரகலா, கோயில்பட்டி கடலைமிட்டாய் வரிசையில் என் நெஞ்சையள்ளும் இனிப்புப் பண்டங்களுள் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு முக்கிய இடமுண்டு. மற்றவற்றையெல்லாம் எம்பெருமான் எப்படியாவது ஒரு சில மாதங்களுக்கு ஒருமுறையாவது யாரிடமேனும் எனக்காகக் கொடுத்து அனுப்பிவிடுவான். இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மட்டும்...

அறிவுஜீவி பயங்கரவாதம்

இன்றைய தினத்தை என் சொந்த விருப்பத்துக்குப் புத்தகங்கள் வாங்குவதற்கென்று ஒதுக்கிவிடலாம் என்று முடிவு செய்து முதல் வரிசையின் முதல் கடையிலிருந்து தொடங்கினேன். கண்ணில் பட்ட வரை அங்கே கூட்டம் குவியும் இடமாக தினத்தந்தி ஸ்டால் இருக்கிறது. ஒரே ஒரு புத்தகம். வரலாற்றுச் சுவடுகள். அடி பின்னியெடுக்கிறது. பெட்டி பெட்டியாக வெளியே எடுக்கிறார்கள், எடுத்த சூட்டில் காலியாகிவிடுகிறது. திரும்பவும் இன்னொரு பெட்டி...

நம்புங்கள்! நாவல் விற்கிறது!

மன்னார் அண்ட் கம்பெனி மாதிரி, செட்டியார் மெஸ் என்று என்னமோ பேர் போட்டு இன்று ஒருவழியாக கேண்டீன் தொடங்கிவிட்டார்கள். இட்லி, தோசை, பரோட்டா, போண்டா, பஜ்ஜி வகையறாக்களும் மினரல் வாட்டர் போத்தல்களும். ஃபுட் கோர்ட் மாதிரி செய்திருக்கலாம் என்று அந்த வாசல் மிதித்த அத்தனை பேரும் சொன்னதைக் கேட்க முடிந்தது. அப்துல் கலாம் கனவு கண்ட 2012ல் அதெல்லாம் நடைமுறைக்கு வந்துவிடும். இன்று அநேகமாக அனைத்துக் கடைகளிலும்...

சென்னை புத்தகக் காட்சி 2011 – முதல் நாள்

தமிழகத்தின் எதிர்காலமே, எழுச்சித் தளபதியே, ஆருயிரே, மன்னவரே என்று ஈகா தியேட்டரில் ஆரம்பித்து சாலையெங்கும் தட்டிகளைப் பார்த்தபோது முதலில் குழப்பமாக இருந்தது. பிறகு சந்தேகமாக. இன்விடேஷனில் ஸ்டாலின் பெயர் இல்லை. அப்புறம் எதற்கு இத்தனை வரவேற்புத் தட்டிகள் என்று புரியவில்லை. ஏதாவது திடீர் ஏற்பாடாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் புத்தகக் காட்சி தொடங்கும் பள்ளி வளாகத்தைத் தாண்டியும் தட்டிகள்...

படம் காட்டுதல் 1

புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி மைதானத்தில் நாளை தொடங்கவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தின் அரங்கம் இது. F 13-14-15 எண். அரங்கில் இருந்து மொபைலில் படமெடுத்து, மொபைல் வழியாகவே பிரசன்னா அனுப்பியது இது. இன்னும் சில காட்சிகள் பின்னால் வரும்.

அனைவரும் வருக

சென்னை புத்தகக் காட்சி 2011 நாளை செவ்வாய்க்கிழமை  [04.01.2011] மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது. எப்போதும் நடக்கும் அதே சேத்துப்பட்டு புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேநிலைப் பள்ளி மைதானம். பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே. இந்திய சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவர் நீதிபதி அரு. லட்சுமணன் கண்காட்சியைத் தொடங்கிவைக்கிறார். கலைஞர் கருணநிதி பொற்கிழி விருதுகளை வழங்கிச் சிறப்புரை ஆற்றுபவர், மத்திய தகவல்...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி