கதை

இன்னொன்று (கதை)

விமானம் ஏறப்போகுமுன்னர் செய்த மருத்துவப் பரிசோதனையில் அச்சுறுத்தல் ஒன்றுமில்லை. விமானத்தில் அல்கொய்தா வீராங்கனையைப் போல ஆறு கெஜம் துணியால் முகத்தைச் சுற்றி மூடிக்கொண்டு, கையுறை காலுறைகளைக் கழட்டாமல், உண்ணாமல், பேசாமல் விரததாரியாகவே அமர்ந்து ஊர் வந்து சேர்ந்தார் பெருந்தேவி.

விமான நிலைய தெர்மல் பரிசோதனையின்போதும் ஃப்ரிட்ஜில் வைத்த பால் பாக்கெட்டைப் போல உடலும் உள்ளமும் குளிர்ந்திருப்பது மானியில் தெரிந்தது. வீடு வந்து சேர்ந்து சுய குவாரண்டைன் கடைப்பிடிக்கத் தொடங்கியதும்தான் கடித்தது கலி.

விரல் நுனிகள் சுட்டன. கண் எரிந்தது. தலை பாரம் சகிக்க முடியாதிருந்தது. தவிர, திடீரெனத் தொடங்கி ஓயாத இருமல். பயந்துபோய் டாக்டரை அழைத்தார் பெருந்தேவி.

சோதித்துப் பார்த்துவிட்டு டாக்டரானவர் நாலு டோலோ அறுநூற்றைம்பது சாப்பிடும்படிச் சொன்னார்.

“டாக்டர் எனக்கு பயமா இருக்கு. இதெல்லாம் கொரோனா சிம்ப்டம்ஸ்.”

“நோவே” என்றார் டாக்டர்.

“எப்டி சொல்றிங்க?”

“நீங்க வந்ததுலேருந்து ஏராளமா குறுங்கதை எழுதியிருக்கிங்க! ரெண்டு வைரஸ் ஒரே சமயத்துல ஒரு உடலைத் தாக்காது. They always keep social distance. டவுட்டா இருந்தா எஸ்ரா, கேஎன் செந்தில், சுரேஷ்குமார இந்திரஜித்த கேட்டுப் பாருங்க.”

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி