சென்னை புத்தகக் கண்காட்சி 2009 – வரைபடம்

சேத்துப்பட்டு அல்லது அமைந்தகரை என்று இரண்டு பெயர்களையும் சொல்கிறார்கள். பச்சையப்பா கல்லூரிக்கு எதிரே உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானத்தில் [பூந்தமல்லி நெடுஞ்சாலை.] நடைபெறவிருக்கிற சென்னை புத்தகக் கண்காட்சி 2009ன் அரங்க வரைபடத்தினைக் கீழே தந்திருக்கிறேன். படத்தில் கிழக்கு, நலம், வரம், பிராடிஜி, ஒலிப்புத்தகங்கள், கிழக்கு இலக்கிய நூல்கள் இருக்கப்போகிற அரங்குகளை மட்டும் தனியே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். இதற்கு நூறு சதவீத சுயநலக் காரணமன்றி வேறு காரணமில்லை. வேண்டுமானால் தேடிப்பிடித்து இன்னொரு காரணம் சொல்லலாம். அனைத்து அரங்குகளின் பெயர்களையும் இச்சிறு வரைபடத்தில் குறிப்பது நடைமுறை சாத்தியமில்லை.

Prodigy புத்தகங்கள், ‘Book Shoppers’ அரங்கில் கிடைக்கும். அதே மாதிரி கிழக்கு இலக்கிய நூல்கள் அனைத்தும் ‘எஸ். விஸ்வநாதன் &கோ’ அரங்கில் கிடைக்கும்.

இனி வரைபடம்:

படத்தைச் சொடுக்கி, தெளிவாக – பெரிதாகக் காணலாம்.

Share

3 comments

  • //படத்தில் கிழக்கு, நலம், வரம், பிராடிஜி, ஒலிப்புத்தகங்கள், கிழக்கு இலக்கிய நூல்கள் இருக்கப்போகிற அரங்குகளை மட்டும் தனியே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். இதற்கு நூறு சதவீத சுயநலக் காரணமன்றி வேறு காரணமில்லை. வேண்டுமானால் தேடிப்பிடித்து இன்னொரு காரணம் சொல்லலாம். “அனைத்து அரங்குகளின் பெயர்களையும் இச்சிறு வரைபடத்தில் குறிப்பது நடைமுறை சாத்தியமில்லை..”//

    உண்மைத்தமிழன்..

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!