ஒரு மகத்தான கட்டுரை எப்படி இருக்கும்? எப்போது யார் கேட்டாலும் நான் சுட்டிக்காட்டுவது முத்துலிங்கத்தின் ‘நீ சேக்ஸ்பியரிலும் மோசமாக எழுதுகிறாய்.’ இந்தக் கட்டுரையை முதலில் ‘அங்கே இப்ப என்ன நேரம்?’ தொகுப்பில் படித்தேன். பிறகு இப்போது முழுத் தொகுப்பின் முதல் பாகத்தில் கண்டபோதும் ஆர்வமுடன் படித்தேன். திரும்பவும் படிப்பேன். எனக்கு இது சலிக்காது. கட்டுரையின் சாரம் இதுதான்:...
அமெரிக்க உளவாளி
தொழில் முறையில் எடிட்டராக இருப்பதால், புத்தகங்கள் விஷயத்தில் நான் இழக்கும் விஷயங்கள் சில உண்டு. அவற்றுள் முக்கியமானது, தனை மறந்து ரசிப்பது. ஒரு காலத்தில் எனக்குப் பிடித்த புத்தகங்களை பத்து முறை, இருபது முறையெல்லாம் திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன். இப்போது ஒரு புத்தகத்தை எடுத்தால் அதிகபட்சம் அரை மணி நேரம். எமகாதக சைஸ் புத்தகம் என்றால் அரைநாள். முடிந்தது. வார்த்தை வார்த்தையாக, வரி வரியாக...