ஐந்து லட்சம் ரூபாய்க்காகத் தற்கொலை செய்துகொள்வது சிறிது அபத்தம் என்று சம்பத்துக்குத் தோன்றியது. ஓராண்டு முழுவதும் முடங்கிப் போனதில் தொழில் இறந்துவிட்டது. உடைமையாக இருந்த அனைத்தையும் விற்று, இருந்த கடன்களை அடைத்துவிட்டான். ஒரே ஒரு ஐந்து லட்ச ரூபாய்க் கடன் எப்படியோ மீதமாகிவிட்டது. கடன் கொடுத்தவன் கேட்க முடியாத சொற்கள் அனைத்தையும் பேசி ஓய்ந்து, இறுதியாக இன்று காலை நேரில் வருவதாகச் சொல்லியிருந்தான்...
எடிட்டர்
சில நாள்களாக அந்த எழுத்தாளருக்கு ஒரு சந்தேகம் இருந்தது. தனது கணிப்பொறியைத் தன்னைத் தவிரவும் வேறு யாரோ இயக்கிக்கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பேயாக இருக்கலாம். அல்லது எங்கிருந்தோ ரிமோட்டில் வேலை செய்யத் தெரிந்த ஒரு தொழில்நுட்ப வல்லுநர். ஆனால் அப்படி ரிமோட் ஆக்சஸ் எதையும் அவர் யாருக்கும் தந்திருக்கவில்லை ஆதலால் பேயாகத்தான் இருக்கும் என்று வலுவாக சந்தேகப்பட்டார். இரண்டு தினங்களுக்கு முன்னர் அவர் ஒரு...
ஒன்றுமில்லாமை
உறுத்தலை இன்னும் நீட்டித்துக்கொள்ள வேண்டாம் என்று நினைத்தான். எதையும் மாற்றாமல் மறைக்காமல் சொல்லிவிட முடிவு செய்து மனைவியை அழைத்தான். ‘உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். நீ ஒருவேளை அதிர்ச்சியடையலாம்.’ ‘என்ன?’ ‘இதற்காக நான் வருத்தப்படப் போவதில்லை. மன்னிப்பும் கேட்கமாட்டேன். ஆனாலும் உன் வருத்தத்தை நான் புரிந்துகொள்வேன்.’ ‘சரி, சொல்.’ ‘நான் மதம்...
ஒரு வீடு ஒரு மனிதன் சில உயிர்கள்
நான் குடியிருக்கும் வளாகத்தில் வசிக்கும் புறாக்களைக் குறித்துப் பலமுறை எழுதியிருக்கிறேன். இங்கே வசிக்கும் மனிதர்களைவிட இவை எனக்கு மிகவும் பரிச்சயமானவை. எந்தளவுக்கு என்றால், அவை தரையில் நிற்கும்போது அருகே சென்றால்கூடப் பறந்து செல்லாத அளவுக்கு. எப்படி என்னைப் போன்ற ஒரு நல்லவனை அவை பார்த்திருக்க முடியாதோ, அதே போலத்தான் அவற்றை என் அளவுக்கு இன்னொருவர் கவனித்திருக்க முடியாது என்பதும். புறாக்களுக்கு ஒரு...