நீங்கள் இலக்கியம் என்று சொல்லுங்கள். இல்லை என்று மறுத்துப் பேசுங்கள். கவிதை என்று சொல்லுங்கள். சொற்குப்பை என்று தூக்கிக் கடாசுங்கள். வெறும் புலம்பல் என்று சான்றளியுங்கள். காவியச் சுவை கொண்ட கவிதைகள் என்று சிலிர்த்துக்கொள்ளுங்கள். எல்லாம் உங்கள் இஷ்டம். ஆனால் ஒன்றை ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டும். இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு வந்த தலைமுறைக்குத் (வாசிக்காதவர்களையும் சேர்த்தேதான் சொல்கிறேன்.)...
ஒரு A1B Positive சரித்திரம்
இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு மத்தியில் முதல் முதலில் தொலைக்காட்சித் தொடருக்கு எழுத ஆரம்பித்தேன். இரண்டாயிரத்து இருபது வரை இடைவெளியின்றி எழுதிக்கொண்டிருந்தேன். கிழக்கில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது மாலைப் பொழுதுகளுக்கு மட்டும் அந்த எழுத்து என்று இருந்தது. முழு நேரமான பின்பு இரவுகளில் மட்டும் இதர வேலைகளுக்கு வாய்ப்பு என்றானது. கசப்புக்கோ இனிப்புக்கோ அங்கே ஒன்றுமில்லை. அது ஒரு பணி. என் தனிப்பட்ட...
இந்த வருடம் என்ன செய்தேன்? – 2021
இவ்வளவு விரைவாக நகர்ந்தோடிய வருடத்தை இதற்கு முன் கண்டதில்லை. இத்தனைக்கும் வருடம் முழுதும் வீட்டிலேயேதான் இருந்திருக்கிறேன். எந்த வெளியூர்ப் பயணமும் இல்லை. வாழ்வில் பெரிய மாற்றங்கள், திருப்பங்கள் ஏதும் ஏற்படவில்லை. குருப் பெயர்ச்சி அதைச் செய்யும், சனிப் பெயர்ச்சி இதைச் செய்யும் என்று சோதிட மாமணிகள் சொன்ன எதுவும் நடக்கவில்லை. வழக்கமான செயல்பாடுகள், அதே படிப்பு, அதே எழுத்து. ஆனாலும்...