என் பதிப்பாளர் இரண்டு முறை அழைத்து, எப்போது முடியும் என்று கேட்டுவிட்டார். என்னைக் கேட்காதீர்கள், என் கழுத்தைக் கேளுங்கள் என்றா சொல்ல முடியும்?
Bukpet-WriteRoom: எழுத்துப் பயிற்சி வகுப்புகள்
விநாயகரை வணங்கி, இதனை இன்று அறிவிக்கிறேன். Bukpet-WriteRoom எழுத்துப் பயிற்சி வகுப்புகளை முறைப்படித் தொடங்குகிறேன். இன்று மாலை இந்திய நேரம் 6.15க்கு என் நண்பர்கள் ராஜேஷ் கர்கா, பெனாத்தல் சுரேஷ், தினேஷ் ஜெயபாலன் இவர்களுடன் என் மகள் பாரதியும் இணைந்து சமூக வெளியில் இதற்கான இணையத்தளத்தை அறிமுகம் செய்வார்கள். தொடக்கமாக, எட்டு வகுப்புகளுக்கான விவரங்களும் அறிவிப்புகளும் இன்று வெளியாகும். இன்னும் சில...