தினமும் எழுதுவது நல்லதல்ல. எழுத்து சடங்கல்ல. நிறைய எழுதுவது நல்லதல்ல. நீர்த்துவிடும். ஆரம்பித்தால் முடித்தே தீரவேண்டும் என்பது அவசியமல்ல. சுயமாக ஏற்படுத்திக்கொண்டாலும் ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில் எழுதினால் நன்றாக வராது. ஆர்வம் எந்தத் திசையில் போகிறதோ, அதனைப் பின் தொடர்வதே நல்லது. நல்ல எழுத்து கட்டுப்பாடுகளுக்கு உட்படாதது. இவையும், இவற்றை நிகர்த்த இன்னும் பல அறிவுரைகளும் எழுதுவது தொடர்பாகப் பல...